பக்கம் எண் :

287


பிறநாட்டின் பெருமை

இயல்-62   

நற்றவத்தின் மாமணியாம் நல்லறத்தின்

      பெருநிதியாம் நபியார் யாக்கூப்

முற்றினிலும் புவிமறந்து இறைவணக்கம்

      புரிவதிலே முனைந்திருந்து

பற்றுடைய இளையமகன் புன்யாமீன்

     அருகழைத்துப் பற்றி நின்று

குற்றுயிராய் வாழ்ந்திடவே பார்வைகுன்றிப்

     போனதெண்ணிக் குமுற லானார்.

 

கண்மணியாம் யூசுபினைக் காணாதக்

     கண், பிறரும் கண்டி டாமல்

தன்னொளியைப் போக்கியதாய் எண்ணிவிட்ட

     யாக்கூபின் தந்தை யுள்ளம்

நன்மகனார் புன்யாமீன் தோள்பற்றி

     முன்பின்னாய் நடைப யின்றார்

அந்நிலையில் தம்மைந்தர் மிசுரிருந்து

     இல்லம்வர அணைத்தார் யாக்கூப்.

 

"எந்தையரே, எந்தையரே; மிசுரினிலே

     யாம்பெற்ற ஏற்றம் போல

எந்தவொரு இடத்தினிலும் இதுவரையும்

     பெற்றதிலை!" என்றான் ஷம்ஊன் ழு

"தந்தையராய் உடன்பிறந்த சோதரராய்

     எங்களையே தகைமை செய்து

பந்தமொடு சொந்தமொடு மிசுரதிபர்

     நடத்திய"தாய்ப் பகர்ந்தான் லாவான்.  

   

     ழு ஷம்ஊன, லாவான், யஹுதா என்பது யாக்கூப் நபியின் மைந்தர்களின் பெயர்களாகும்.