பொறுமையின் எல்லை! இயல்-64 ஓராண்டு ஈராண்டு மூன்றாண்டு என்றபடி ஒவ்வோர் ஆண்டாய் போராடி ஐந்தாண்டைப் போக்குவித்த மிசுர்மக்கள் பொறுமை போக்கும் ஆறாண்டு தொடங்கியது, அழுகுரலும் அவமதிப்பும் அமைச்சர் முன்னே நேராக நிகழுகின்ற கொடுமைகளைக் கண்டரசர் நெஞ்சம் வெந்தார் "பொன்கொடுத்தும் பொருள்கொடுத்தும் போகாதப் பசியினையே போக்கி வாழ மண் ழு கொடுத்தோம் - மனைகொடுத்தோம் மாறாத மனம் கொடுத்தும் மாறி டாமல் புண்படுத்தும் பஞ்சப்பேய் புரிகின்ற பெருங்கொடுமை போக்கு தற்கு என்கொடுப்போம்? எம்மிடத்தே இருப்பதெலாம் உயிர்தானே!’ என்றார் மக்கள் வேறு "இருக்கின்ற அனைத்தும் போயின் இருக்கிறேன் நானே என்று உருக்கமாய் அமைச்சர் சொன்ன உறுதியை நம்பி வாழ்ந்தோம்; இருக்கின்ற அனைத்தும் தந்தோம் இனி எதும் இல்லை!" என்றே பெருக்கினார் ஒருவர் கண்ணீர்; பேசினார் அமைச்சர் யூசுப்: ழு மண் கொடுத்தோம்:-நிலம் விற்றதைக் குறிப்பது. |