"வேண்டுவோர்க் கில்லை என்றே விரட்டிடச் சொல்லு வீரேல் ஆண்டவ னிடத்தில் கேட்கும் அறுகதை இழந்து போவோம்! தோன்றிய பஞ்சம் மேலும் தொடர்ந்திடில் நமது துன்பம் நீண்டிடு மன்றோ? அந்த நிலையினை நினைப்பீர்!" என்றார் செம்மலர் யூசுப் வார்த்தை சிந்தையைக் குலுக்கக் கேட்டோர் "எம்மிட மிருந்த தெல்லாம் ஈந்தனம், இனிமே லேதும் எம்மிட மில்லை என்றே இயம்பினோம்!" என்று சொல்ல "நம்மிட மிருப்ப தெல்லாம் நல்குவோம்!" என்றார் யூசுப். "பிழைத்திருக் கின்றோ மென்ற பேற்றினை நினைவிற் கொண்டு உழைப்பினை நாட்டுக் கீந்து உணவினை உண்டு வாழ்வீர்! உழைத்திடும் வலுவற் றோரை உடல் நல மிழந்திட் டோரை அழைத்திடு கின்றேன் மன்னர் அடிமையாய் ழு வாழ்தற்" கென்றார். சாவுக்கு உணவாய் போகும் தண்டனை தந்தி டாமல் சேவைக்கு உணவை யூட்டும் செயல் முறை கண்டு, மக்கள் யாவர்க்கும் நீதி காணும் யாகத்தில் வெற்றி கண்ட காவலர் யூசுப் வாழ்கக் கையேந்திச் சென்றார் மக்கள். ழு அடிமைப்படுவதும், அடிமை கொள்வதும் அக்கால வழக்கம். |