தீர்த்துக் கொள்ள வழி இல்லாமலாகி விட்டது. காதல் வெறியுணர்வாக மாறி, தன் இச்சைக்கு அவனைப் பலியாக்கிக் கொள்ள முனைகிறாள். அவனோ ‘அவனாக’ இருக்கவில்லை ‘அவராக’ இருக்கிறார். அடிமையென இருந்தாலும் ஆண்டவனின் தூதுவராக-அறிவின் கேடயமாக இருக்கிறார். அவர் நற்புத்தி கூறுவதை கவிஞர்:- வாய்மையெனும் மாளிகையின் மதிலுடைக்கப் பெரு மரமே வளரக் கண்டால் தூய்மையெனும் கோடரியால் பிளந்தெறிவர் மாளிகையின் சொந்தக் காரர்! தாய்மையெனும் அரும் பதவி தாங்குகின்ற பெண் குலமே தவறு மாயின் மாய்ந் தொழியும் மனிதநெறி அதற்குதவும் ஆடவரும் மிருக மாவார்! எனக் கூறுகின்ற உவமையழகும், உறுதிப்பாடும் ஒப்புயர்வற்றதாகும் கணவன் இறந்த பின்னர் அவள் காதல் நிறைவேறியதென வரலாறு முடிந்தாலும் சுலைகாவின் காதல் வெறி யூசுப் (அலை) அவர்களை எத்துணை அல்லல்களுக்கு ஆளாக்கிற்று என்பதையும், நேர்மை எத்துணை சோதனைகளை வெல்ல வேண்டியிருந்தது என்பதையும் கவிஞர் திலகமவர்கள் நயம்படக் கூறும் கவிதைத் திறன் ஒப்புவமையற்றது தமிழுலகுக்கு இது ஒரு புதுமைக் காவியம். தமிழுணர்ந்த முஸ்லிம் உலகுக்கு உமறுப் புலவர் தந்த சீறாவுக்குப் பிறகு கிடைத்துள்ள இரண்டாவது முழுமைக் காவியம்." | இந்த விமர்சனம் செய்தவர் ‘மறுமலர்ச்சி’ ஆசிரியர் A. M. யூசுப் அவர்கள | |