பக்கம் எண் :

319


பின்னுரை  

புனித குர்ஆனும், பைபிளும் குறிப்பிடும் வரலாற்றினை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் காப்பியத்துக்கு. அதற்கு விளக்கமாகப் பின்னுரை எழுதுவது அவசியமாகியது.

முந்தையப்   பதிப்புக்கெழுதிய  பின்னுரையை  இந்தப்   பதிப்பில்  இடம் பெறச் செய்ய முடியாமல்  இதற்கெனத்  தனியே  ஒரு  பின்னுரையை எழுதும்படி நேர்ந்து     விட்டது.  

அந்தப்   பின்னுரையில்    யூசுப்-சுலைகா   இருவருக்கும்   திருமணம்   நிகழ்ந்ததற்குப்  பிந்தைய   நிகழ்ச்சிக்  குறிப்புகளைச் சுட்டிக்காட்டி இருந்தேன்.   அந்தக் காப்பியத்தை திருமணம் நிகழ்வதோடு முடிந்திருந்தமையால், அதற்குப்    பிந்தைய  நிகழ்ச்சிகளை   அப்படிச்சொல்ல வேண்டிய அவசியமேற்பட்டது.

இந்தக்  காப்பியத்தில்  திருமணத்திற்குப்  பிந்தைய நிகழ்ச்சிகளை இரண்டாம் பாகமாகப்  புதிதாக  இயற்றி  இணைத்துள்ளதால், இதற்கெனப் பின்னுரையும் புதிதாக எழுத வேண்டியதாகி விட்டது.  

பஞ்ச  காலத்தில்  நபி  யூசுப்  (அலை)  அவர்கள்  மேற்கொண்ட   செயல் திட்டங்கள்  தொடங்கி  பெற்றோரும்  பிறந்தோரும்  மீண்டும்  ஒன்றாக  இணைகிற வரையில்   நிகழ்பவைகளைப்  புதிதாக    இணைத்துள்ள  இரண்டாம்  பாகத்தில் இயற்றியுள்ளேன். இந்த   நிகழ்ச்சிகளினிடையே  அவர்களிருவருக்கும்  இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை (இப்ராயீம்-மீஷா)யும் எழுதியுள்ளேன்.  

யூசுப்-சுலைகாவுக்குப் பிறந்த குழந்தைகள் இரண்டா மூன்றா என்பதில் குர்ஆன் விரிவுரையாளர்களும், வரலாற்றாசிரியர்களும் வேறுபடுகின்றனர். தப்ஸீர் ஜலாலைன் இரண்டு