பக்கம் எண் :

320


குழந்தைகளென்றும், ம   ஆலிமுத்  தன்ஸீ’ லும், ‘ரூஹுல்    மஆனி’யும்   மூன்று குழந்தைகள்  என்றும்  சொல்கின்றன.  இரண்டு  மைந்தர்களையும்,  ஒரு மகளையும் பெற்றதாகவே பெரும்பாலானவர்கள் கூறி இருப்பினும் என்  காப்பியத்தில் இரண்டு மைந்தர்கள் மட்டுமே பிறந்திருக்கின்றனர் மூன்றாவது பெண் என்னவாயிற்று? அது இனிமேல்  பிறக்கலாம்.  [நபி  ஐயூப்  (அலை)  அவர்களின் மனைவி ரஹீமாவே, யூசுப்-சுலைகாவுக்குப்  பிறந்த  மூன்றாவது குழந்தை என்கின்றனர்.]     

நபி யூசுப் (அலை) அவர்களின் தந்தை யாக்கூப் (அலை) ஈஸு என்பவரோடு இரட்டையராகப் பிறந்தது போலவே, நபி யூசுப்   (அலை) அவர்களுக்கும் இரட்டையராகவே  இப்ராயீம்-மீஷா பிறந்திருக்கின்றனர். [இந்த    இப்ராயீமை எப்ராயீம், அப்ராயீம் என்றும், மீஷாவை மனாசே என்றும்       குறித்துள்ளனர்.]

நபி யூசுப்  (அலை)  அவர்களின்  அன்னை ராஹிலாவின் மூத்த சகோதரியை நான் பல்கியா என்று குறிப்பிட்டிருக்கிறேன், அவளை புல்கா என்றும் லாயா‘ லையா, லேயா  என்றெல்லாம்  குறிப்பிட்டுள்ளனர்.  புல்கா என்பவர் அடிமைப் பெண் என்றும், ராஹிலாவின் மூத்த சகோதரி லையா என்றும், இறுதியில் யூசுப் நபி தம் பெற்றோரை சந்தித்து கண்ணியப்படுத்தியபோது தந்தை யாக்கூப் நபியுடன் இந்த லையாவையே அரியாசனத்தில் அமர்த்தியதாகவும் சொல்கின்றனர்.

  குர்ஆனில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்போது (12:99) ‘அபவைஹி’ என்ற வார்த்தையிலேயே இறைவன்  குறிப்பிடுகிறான். ‘அபவைஹி’ என்பது    இரு தந்தையரைக் கூறும்  வார்த்தை  என்றும்,  இது  யாக்கூப்  நபியுடன்  அவர்களது அண்ணன் ஈஸுவைக்  குறிக்கலாம்  என்றும்  சொல்கின்றனர்;  ‘அபவைஹி’  என்ற வார்த்தைக்குத் தந்தையர்கள் என்று பொருளிருப்பினும், தாய் தந்தையரையே இப்படி ‘அபவைஹி’ என்று குறிப்பிடுவது அரபிகளின் பழக்கமென்றும் சொல்கின்றனர்.