இந்த இடத்தில் அவர்கள் யார் யாரென்பதைப் பெயரிட்டு விளக்காமல் பெற்றோரைப் பெருமைப் படுத்தினார் என்றே எழுதியுள்ளேன். இது வரையில் ‘ஜுலைகா’ வா, ‘சுலைஹா’ வா என்றும், ‘சுலைஹா’ வா, ‘சுலைகா’ வா என்றும் உச்சரிப்பில் வேறுபாடு கூறப்பட்டு வந்ததேயன்றி, சுலைகாவையே ஜலீகா என்று கூறப்படவில்லை. பைபிளில் ஸெலீகா என்று சொல்லப்படுகிறது. நாம் சொல்லி வரும் சுலைகாவையும் பைபிள் குறிப்பிடும் ஸெலீகாவையும், சமப்படுத்தி ‘ஜலீகா’ என்று சில மாதங்களுக்கு முன் வெளிவந்த அன்வாறுல் குர் ஆனில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மொழி வேறுபாட்டினால் பெயரில் உச்சரிப்பு வேறுபடுகிறதென்று சொல்லி விட்டால் கூட, யூசுபுக்கும் சுலைகாவுக்கும் திருமணம் நடந்ததில் கூட சந்தேகத்தைத் தோற்று வித்திருக்கிறார் அன்வாறுல் குர்ஆனின் விரிவுரை ஆசிரியர். "சரித்திர ஆசிரியர்களில் சிலர் யூசுபுக்கும் ஜலீகாவுக்கும் திருமணம் நடந்ததாகவும், அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்ததாகவும் கூறுகின்றனர்." என்று எழுதிக் காட்டியும் இதற்கு ஆதாரமாக காஜின் ஹக்கானி, தன்தாவி, அஹ்ஸன், ரூஹுல் மஆனி, இப்னு ஜரீர் முதலியவற்றை சுட்டிக்காட்டும் அவர்- "குர்ஆன் ஹிதீதுகளிலோ, தவ்ராத்திலோ இவர்களது திருமணம் பற்றி எந்தக் குறிப்புமில்லை என்பதாலும், ஆதியாகமம் 41-45ல் "ஒன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்தி பிராவின் குமாரத்தியாகிய ‘ஆஸ்நாத்’ தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்" என்று கூறப்பட்டிருப்பதாகவும், இதையே வேத அகராதியும் ஆதரிப்பதாகவும் சுட்டிக் காட்டி இந்த இரு கருத்துக்களில் ஏதாதொன்றை ஏற்றுக் கொள்ளலாமென்று" தம் தப்ஸீரில் குறிப்பிட்டிருக்கிறார். இறைவனே தன் திருமறையில் அழகான வரலாற்றுக்குரிய நபியாக சிறப்பித்துக் கூறும் யூசுபின் வாழ்க்கையில் |