பக்கம் எண் :

36


பிள்ளைபுகழ் பாடுகின்ற பெற்ற வர்க்குப்  

பெரும்புகழைத் தரும்மணியாய் மிளிர்ந்தயாக்கூப்

கிள்ளைமொழி பேசுதற்கு மெள்ள ஊர்ந்து  

கிடைக்காத பெருநிதியாய்ச் சிறப்புப் பெற்றுத்

துள்ளுநடை பயிலுகின்ற வளர்ச்சி யுற்றுத்  

துடிஇளமை எய்தியதும் கடமை வாழ்வைக்

கொள்ளுகின்ற நற்பருவம் கண்டு, வாழ்க்கைக்  

குறிக்கோளாம் இல்லறத்தை விரும்ப லானார்!

பண்புமிகும் பாட்டனார், தந்தை மற்றும்         

படைப்பினங்கள் அத்தனையும் ஏற்று வாழும்

அன்பொளிரும் இல்வாழ்வை அடைந்த யாக்கூப்

அதன்பரிசாய் ஈரைந்து மகவைப் பெற்றே  

இன்பமுடன் புவிவாழ்வை நடாத்துங் காலை     

இல்லரசி ‘பல்கியா’ இயற்கை எய்தத்      

துன்பமுடன் சேர்ந்துவரும் இன்பமெண்ணித்     

துயர்மறந்து மைந்தர்களை அணைத்து வாழ்ந்தார்!

 

விந்தையிலும் விந்தைமிகும் கதைகள் சொல்லி    

விளையாட்டில் சிறுவர்களைத் திருப்பி விட்டே

எந்தநிலை எழுந்தாலும் இறைவன் ஆணை      

எனும்நினைவை மூத்தவர்க்கு விளக்க லானார்!

தந்தையின்நல் லறிவுரையில் சாந்தி காணும்      

தகுதியினை அடைந்திட்ட மூத்த மைந்தர்     

சிந்தையினில் தாய்நினைவு தேய்ந்து போகச்,     

சிறுவர்களோ தாய்தேடி வாட லானார்!       

 

மறைந்திட்ட அன்னை முகம் காணு தற்கு        

மனந்துடிக்கும் மைந்தர்களின் எழில் முகத்தில்

நிறைந்திட்ட பெருந்துயரைக் கண்ட யாக்கூப்      

நெஞ்சினிலும் கொடுந்துய ரம்நிழல்வ டிவாய