தந்தார். அவர்களது பேருதவியை ஆதாரச் சக்தியாகக் கொண்டே என் பணியைத் தொடங்கினேன். மற்றொருவர் அப்போது மலாயாவிலே இருந்த வணிகப் பெருந்தகையான A. V. M . ஹாஜி முகம்மது இபுறாஹிம் [மூன்றாம் பதிப்புக்கு உதவிய ஏவி. எம். ஜாபருத்தீன் அவர்களின் தந்தையார்] அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். என் கடிதம் கிடைத்த மறுநாளே இங்கிருந்த தனது மகனார் அஹ்மது கபீருக்குத் தொலைபேசிமூலம் உத்தரவிட்டு உதவியளிக்கச் செய்தார்கள். புத்தகத்தை அச்சிடக் கொடுத்த பின் எனக்கேற்பட்ட இடையூறுகள் பல. குறிப்பாக என் உணர்வைப் பாதிக்கக் கூடிய அளவுக்கு இருபெரும் உயிரிழப்புகளால் தாக்கப்பட்டேன். இதனால் என் பணியைத் தொடர்ந்து செய்யமுடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டேன். காலம் செல்லச் செல்ல அச்சுப் பணியும் செலவுகளும் மிகக் கடுமையாகி விட்டன. இதனாலெல்லாம் நாம் சோர்ந்து விடக்கூடாதென்று என்னை உசுப்பி விட்டு இப்பணியை முடிக்கச் செய்ய அவ்வப்போது எனக்கு வேண்டியதைச் செய்து உதவியவர்களில் A. K. அப்துல் ஹலீம் ஹாஜியாரும் அவரது சகோதரர் ஜுனைதும்; வாவுசன்ஸ் மஹ்தூம் ஹாஜியாரும் அவரது சகோதரர் சுலைமான் ஹாஜியாரும்; அஹ்மது கம்பெனி J. M. ஹாஜி இக்பாலும் மெஜஸ்டிக் ஹாஜி அப்துல் கரீமும் மிகவும் முக்கியமானவர்கள். மேற்குறிப்பிட்ட அனைவருக்கும் என் இதய நன்றியைக் காணிக்கையாக்கி, புகழனைத்திற்குமுரிய இறைவன், இவர்களுக்கு எல்லா நலமும் வளமும் அருளப் பிரார்த்திக்கின்றேன். |