பக்கம் எண் :

5


முன்னுரை

   அல்லாஹ்வின் பேரருட் கருணையினால் இந்தக் காப்பியம் முழுமையடைந்து உங்கள் கரங்களில் தவழுகிறது. இதனை உங்களின் இதயங்களிலும் பதிய வைக்க வேண்டுமென்பதற்காக இதுபற்றிச் சில விளக்கங்களை இந்த முன்னுரையில் குறிப்பிட விரும்புகின்றேன்.  

   இதிலுள்ள நிகழ்ச்சிகள் எதுவும் கற்பனையல்ல; முற்றிலும் வரலாற்று நிகழ்ச்சிகள். சில சமயங்களில் கதைகள் வரலாறாகக் கருதப்படுவதும், வரலாறுகள் கதைகளாகி விடுவதுமுண்டு.  

   கற்பனைக் கதைகளைவிடச் சுவையான சம்பவங்களையும், பிறவரலாறுகளில் பெறமுடியாத அபூர்வப் படிப்பினைகளையும் ஒருங்கே தருவது இந்தக் காப்பியம். இது குறித்து இறைவனே தன் திருமறையில் விரிவாகக் கூறுகிறான்.

   அவன் இந்த வரலாற்றினை மட்டும் சொல்லிக் காட்டவில்லை; இன்னும் எத்தனை எத்தனையோ வரலாறுகளைச் சொல்லிக் காட்டுகிறான்.

   மனிதர்கள் மறந்துவிட்ட வரலாற்றினை-மறக்கவே கூடாத வரலாற்றினை-பரம்பரைப் பரம்பரையாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டிய வரலாற்றினை எல்லாம் அவன் சொல்லிக் காட்டுகிறான். மற்றைய