பக்கம் எண் :

42


[இதற்குப்பின் ராஹிலா மற்றொரு மைந்தனைப் பெற்றெடுத்தாள். அக் குழந்தையின் பெயரே புன்யாமீனாகும். அக்குழந்தை பிறந்த பின்னர் ராஹிலாவுக்கு உடல் நலிவு ஏற்பட்டது.]

 

இல்லரசியின் இழப்பு

  இயல்-4

 

நாட்களும் உருண்டு, நகர்ந்தன திங்கள்,   

ஆண்டும் பிறந்து மாண்டது; மீண்டும்       

தோன்றிய ஆண்டு நீண்டு தேய்ந்தது!       

இதனிடை......                            

தாயின் மடியில் தவழ்ந்த யூசுப்             

பாயில் அமர்ந்து பாய்ந்தே ஊர்ந்து,         

பளிச்சிடும் முத்துப் பற்களைக் காட்டிக்       

கிளிமொழி பேசி வளர்ந்திடக் கண்டே       

அன்னையின் உள்ளம் முன்னிலும் மகிழ்ந்தது.

ஆயினும்......                             

தன்னுடல் வாடத் தாக்கிடும் பிணியை         

இன்னதென் றறியா தேங்கிய ராஹில்         

தன்னருங் கணவர் கண்டிடா வண்ணம்        

பன்னெடு நாட்கள் பதுக்கியே வைத்தாள்.      

என்றாலும்......                              

பின்னொரு நாளில் தன்னிலை யுணர்ந்து        

கண்மணி யூசுபைக் கட்டி யணைத்து

‘என்னரும் மகனே! இன்றோ நாளையோ

உன்னைப் பிரிந்திட என்னைப் படைத்தவன்

கண்ணைக் காட்டிக் கடிதில் அழைக்கிறான்!