பக்கம் எண் :

45


யூசுபின் பிரிவு

இயல்-5

 

இல்லற வாழ்வில் இன்பமும் துன்பமும்

இணைந்திடும் உண்மையை உணர்ந்து

நல்லறங் காக்கும் யாக்கூபின் நெஞ்சம்

நாயகி மறைந்ததை மறந்து  

நல்லருள் சேர்க்கும் வல்ல தயாளன்

நாட்டம்போல் வாழ்ந்திடத் துணிந்தே

எல்லையில் லாநல் லன்புடன் யூசுபை

எவ்விதம் வளர்ப்பதென் றாய்ந்தார்.

பெற்றவள் அணைப்பைப் பிரிந்திடாச் சிறுவர்  

பிரிந்ததம் அன்னையைத் தேடிச்

சற்றுமோ யாமல் அழுவதைக் கண்டு

சகித்திட இயன்றிடா யாக்கூப்

சுற்றமும் கலந்து யூசுபை வளர்க்கச்  

சோதரி யாளிடம் விடுத்தே  

மற்றொரு குழந்தை புன்யாமீனை  

வளர்த்திடத் தாதியர் அமைத்தார்!