பக்கம் எண் :

49


‘சூழும் இருளும் விரைந்தோடும்

     சூரியன் மீண்டும் ஒளிகாட்டும்!

வாழும் உயிர்கள் அத்தனையும்

     வாய்ப்புக் கேற்ப வாழ்ந்திடவே

தாழ்வும் வாழ்வும் சமமாக்கித்

     தந்தான் இறைவன்!" என யூசுப்

சூழ்ந்து நிற்பவர் வியந்திடவே

     சொன்னதும் மகிழ்ந்தார் யாக்கூபே!

 

சோதரி கூறிய நெறிமுறையைத்

     துணிவாய் மறுத்த மகன்யூசுப்

வாதத் திறனை மிகவுணர்ந்து

     வாரியணைத்தே அரைநொடியில்

போதனை புரியும் பேரறிவைப்

     புகட்டி வளர்த்த சோதரிக்கு

நாதர் யாக்கூப் பெரும்நன்றி

     நவின்றார், அவளும் மகிழ்ந்தாளே!