திறந்திடில் என்பொருள் தேடலாம், இல்லையேல் சொன்னது தவறென மன்னிப்புக் கோருவேன்" என்றனள்; இதுதான் நன்றென யாக்கூப் ஒப்பினார், யூசுப் உண்மையில் இவ்விதத் தப்பிதம் செய்ததாய்ச் சாட்சியம் கிடைத்திடில் தண்டனை விதிக்கவும் தவறேன்" என்றதும் "தண்டனை தருவது என்பொறுப்" பென்றனள். இந்தச் சமயம் ஏக்கமாய் யூசுப் சொந்தப் பெட்டியைச் சுட்டிக் காட்டி "அந்தப் பெட்டியில் அப்பொருள் இருந்திடில் எந்தத் தண்டனை எனக்க ளித்தாலும் ஏற்பேன்!" என்று இயம்பி அழுதார். "பார்ப்போம்!" என்று பார்த்தனர் பெட்டியை! பெட்டியைத் திறந்து கொட்டிப் பார்த்ததும் கட்டிடும் இடுப்புக் கச்சையைக் கண்டனர் ! "எவ்விதம் இதனுள் வந்தது?" என்றாள். "அவ்விதம் ஏதும் அறிந்திடேன் நானும் இவ்விதம் வருமுன் இந்தப் பெட்டியில் ஒவ்வொரு உடையாய் ஒழுங்குடன் அடுக்கி கொண்டுவந் திங்கே கொடுத்தது முதலாய் ஒன்றும் அறியேன்!" என்றார் யூசுப்! "திருடிய குற்றம் செய்தது மன்றிப் பெரும்பொய் பேசவும் விரும்பு கின்றாயோ? ஒருமுறை தவறு புரிந்ததற் காக வருந்துதல் விட்டு மறுமுறை தவறே செய்வதேன்? என்று சினந்து கூறினாள். "மெய்யும் பொய்யும் தெய்வமே அறியும்!" என்றார் யூசுப், "எனக்கும் தெரியும்!" |