பக்கம் எண் :

59


ஆடுகின்ற மயிலுமிசை பாடுகின்ற

     குயிலுமென அங்கு மிங்கும்

ஓடிவிளை யாடுகின்ற சேடியரில்

     சுலைகாவும் ஒன்று சேர்ந்து

சூடுதற்கு நறுமலரைப் பறித்தெடுத்தே

     எழில்மாலை தொடுப்ப தற்குக்

கூடியதும் ஒருதோழி நெடுநேரம்

     ஆகியதாய்க் குறிப்பிட் டாளே.

 

என்றைக்கு மில்லாத ஏதேதோ

     எண்ணத்தால் என்றன் உள்ளம்

இன்றைக்கே எங்கெங்கோ அலைகின்ற

     காரணத்தால் இதுவ ரைக்கும்

சென்றிட்ட நேரத்தை அறியாமல்

     நின்றிட்டோம் சேடி யர்காள்!

சென்றிடுவோம், விரைவாகப் புறப்படுவீர்

     எனச்சுலைகா செப்பி னாளே.

- - x - -