ஏங்கி உயர்ந்து தாழ்கின்ற எழில்மிகும் சுலைகா மார்பினிலே தேங்கி அழுத்தும் கொடுந்துன்பம் தெரிந்து வருந்தி எழுப்பினரே. தூக்கத் திருக்கும் தனைநெருங்கித் துணிவாய் யாரோ எழுப்புவதை நோக்கத் துணிந்தாள் என்றாலும் நொடியில் மாற்றி, அவனேதான் காக்க வந்தான் எனநம்பிக் கண்கள் மலர்ந்த சுலைகாவைத் தாக்கப் பாய்ந்தது ஏமாற்றம் தாதியர் தாங்கிப் பிடித்தனரே! - - x - - |