"பறந்துவந்த தாரகைகள் பதினொன் றும்என் பாதத்தில் சிறந்த முத்தம் தந்தபின் சிரங்கு னிந்து நின்றன! மறைந்து மண்ணில் தங்கிடும் மட்டில் லாத செல்வங்கள் நிறைந்த பேழை கோடிகோடி நேரில் வந்து சேர்ந்தன!" "ஒன்று பத்து நூறென ஓடி வந்த மாந்தரில் என்றும் காணா மன்னரும் இருக்கக் கண்டேன்!" என்றிடும் தன்ன ருமைப்பு தல்வனைத் தாவித் தழுவும் யாக்கூபு "இன்னும் வேறு யாருக்கும் இதைச்சொ லாதே!" என்றனர். தந்தை வார்த்தை கேட்டதும் தயங்கி நின்ற யூசுபு "சொந்தச் சோதரர் இடத்தும் சொல்லல் குற்ற மாகுமோ?" மைந்தன் வார்த்தை கேட்டதும் மனமே நொந்து யாக்கூபு "எந்த நேரமும் எவர்க்கும் இயம்ப லாகா!" தென்றனர். தந்தை யாக்கூப் செய்கையில் சந்தேகம் கொள்ளா யூசுபு சொந்த மூத்த மைந்தருக்கும் சொல்ல வேண்டா மென்றிடும |