பக்கம் எண் :

70


அந்த வார்த்தை கேட்டதும்

     அதனை முழுதும் ஒப்பினர்.

இந்தக் கனவி லேதோ மர்மம்

     இருக்க லாமென் றாய்ந்தனர்!

 

எந்த மர்மம் ஆயினும்

     இரண்டு தட்டை நீங்கிடில்

அந்தச் செய்தி அம்பலமாய்

     ஆன தென்ற உண்மையைச்

சிந்தையில் நினைத்தி டாமல்

     திரையி டவே முயன்றனர்.

அந்தச் செய்தி மறைவி ருந்தே

     அறிந்தான் ‘ஷம்ஊன்’ என்பவன்!  

- - x - -