பேரழகி சுலைகாவை அவரது பெண்மை அழிக்கப்படாமல் முழுமையான கன்னிப் பெண்ணாகவே நபி யூசுபிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற கவலையில்,அவரது முதற்கணவர் அஜீஸை ஆணும் பெண்ணுமற்ற ‘அலி’யாக்கி இருக்கின்றனர் சிலர்.நான் அவரை ‘வயது சென்றவ’ரென்றும் ‘திருமண வாழ்வில் விருப்பமற்றவ’ரென்றும் சுலைகாவின் தந்தையின் வாயிலாய்ச் சொல்ல வைத்திருக்கிறேன். (இயல்30-144ஆம் பக்கம்) அப்படியே உண்மையில் அஜீஸ் ‘அலி’யாக இருந்திருப்பாரேயானால், ஒரு அரச குமாரியை மணந்து கொள்ள அவர் துணிந்திருக்க முடியாது.அப்படியே துணிந்தால் அதன் பின்விளைவுகளை அவரால் நன்கு ஊகித்திருக்க முடியும். அன்றியும் சுலைகாவின் பெண்மையைப் பாதுகாக்க, அதற்குரியவரை ‘அலி’யாக்குவதன் மூலமே செய்வதென்றால் இந்த இரு பாத்திரங்களின் சிறப்பும் குன்றி விடுகிறதல்லவா! அவர் ஆண்மை மிக்கவராயும், அதை அடக்கியாள்வதில் ஆற்றல் மிக்கவராயுமிருந்தார் என்பதிலுள்ள சிறப்புதான் அஜீஸின் பெருமையையும் உயர்த்துகிறது; காதலனைத்தவிர தன்னைக் காற்றும் தீண்டக் கூடாதென்று வாழ்ந்த சுலைகாவின் பெருமையையும் உயர்த்துகிறது. இதே சமயத்தில், எந்தப் பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்காத யூசுபின் பத்தினித்தனத்தைப் புரிந்து கொள்ள முடியாத தோழிகள் "அவர் ஆண்மையற்றவர்" என்று சுலைகாவிடம் கூறுவதும், "அவருடைய ஆண்மையை அனுபவிப்பதற்காக அவரைக |