பக்கம் எண் :

75


(வேறு)

 

மைந்தரின் அழைப்பை மறுத்தார் யாக்கூப்;

தந்தையின் முடிவைத் தடுத்தார் யூசுப்

"இந்தஓர் நாளே என்னையும் அங்குத்

தந்தையே அனுப்புவீர் தமையன் மாருடன்."

 

கெஞ்சினார் யூசுப் கேட்டதும் யாக்கூப்

அஞ்சினார் ஆயினும் அனுப்பிட ஒப்பினார்!

"வெஞ்சின ஓநாய் வெகுவாய் இருக்கும்

துஞ்சாது யூசுபைச் சூழ்ந்தே இருப்பீர்!"

 

என்றார் யாக்கூப் இதயம் களித்து

நன்றென ஒப்பினார், நலமுடன் மீள்வதாய்ச்

சென்றார், சென்ற திசையினை நோக்கி

நின்றார் யாக்கூப்; நெஞ்சினால் வாழ்த்தினார்.