பக்கம் எண் :

78


"உன்னிடம் அவன்பெய ரிருப்பிடம் தேட

     உரைத்தது போலவே இனியும்

என்னிடம் ஏதும் கூறிட வேண்டாம்

     "ஏகுக" என்றனள் சுலைகா.

 

"எத்தனை நாட்கள் எத்தனை திங்கள்

     இப்படி ஏங்குவ?" தென்றாள்,

எத்தனை காலம் ஏங்கினும் உனக்கு

     என்னவோ?" என்றனள் சுலைகா.

இத்தனை ஆண்டும் இப்படித் தன்னை

     எதிர்த்திடாச் சுலைகாவின் வார்த்தை

அத்தனை யும்அவ னாசையின் விளைவென்

     றறிந்தகன் றாள்கிழத் தாதி!
 

- - x - -