பக்கம் எண் :

87


வறியவர்கள் அரசுசெய்யக் கனவு கண்டால்

     வாய்த்திடுமோ? ஆய்ந்திடுவீர்!" என்றாள், கேட்டு

"பரிவுடைய அவரெனக்கே நான வர்க்கே!

     பலித்துவிடும் என்கன" வென்றாள் சுலைகா.

 

பாய்ந்துவரும் காதற்கணை தடுப்ப தற்குப்

     பகுத்தறிவுக் கேடயத்தால் ஆகா தென்றே

ஆய்ந்துணர்ந்த கிழத்தாதி சுலைகா நோக்கி

     "அப்படியே நும்கனவு பலித்தி டட்டும்!

சாய்ந்திடுவீர் சற்றேனும் சயனம் கொள்வீர்!

     தாதியர்கள் தக்கபணி செய்வர்!" என்றாள்

"போய்விடுவீர் எல்லோரும், அவனே இன்று

     புலர்ந்திடுமுன் வந்தாலும் வரலா" மென்றாள்.

 

சுலைகாவின் உறுதிமிகும் வார்த்தை கேட்ட

     தோழியர்கள் அப்படியே விலகிச் சென்று

‘குலையாத நம்பிக்கை வெற்றி கொள்ளக்

     கூடு’மென்ற முதியவர்சொல் நினைவு கூர்ந்து

நிலையாக நின்றிருந்தார் அங்கு மிங்கும்,

     நெஞ்சில்சுமை யற்றவளாய்ச் சுலைகா தூங்க

அலைமோதும் பல்லுணர்வும் முகத்தில் தோன்றி

     அழகுசெய்யும் புதுமையினைக் கண்டார் நின்றோர்.

- - x - -