பக்கம் எண் :

92


இறைவனை வேண்டல் :  

துய்யனே இறைவ னேஎன்

     துயர்முகம் கண்ட பின்னும்

ஐயனே, அழக னேஎன்

     அன்பதைச் சொன்ன பின்னும்

பொய்யனாய் மறைந்தே என்றன்

     புலனெலாம் துடிக்கச் செய்து

மெய்யனே காதல் நெஞ்சம்

     வெந்திடச் செய்வ தென்னே?

 

தோழியர்க்குச் சொல்லல் :  

சேடியே அவனே இங்கென்

     திருமுகம் காண வந்தான்;

ஓடியே காலில் வீழ்ந்தே

     உவந்திட வேண்டி நின்றேன்;

"கூடியே வாழ்வோ" மென்று

     கூறினான் மகிழ்வு கொண்டேன்;

வாடியே தவிக்க விட்டே

     ஓடியே மறைந்திட் டானே!

 

சொன்னதும் செய்ததும் :

"உறுதியில் நிலைக்க"ச் சொல்லி

     ‘உணர்ச்சியை அடக்கி’க்கூற

‘இறுதியில் உனக்கு நானாய்

     எனக்குநீ யாவாய்’ என்று

குருதியில் ஆசைத் தீயைக்

     காழுந்திடத் தூண்டி விட்டுச்

சுருதிசெய் இதய யாழின்

     நரம்பையும் சுண்டிச் சென்றான்.