பக்கம் எண் :

94


கிழவியின் போதனை :  

கதறியே புலம்பு கின்ற

     சுலைகாவின் கரங்கள் பற்றிப்

பதறியே கிழவி சொல்வாள்

     "பார்புகழ் மன்னர் தைமூஸ்

புதல்வியே மனங்க வர்ந்து

     போய்விட் டஅவன் நினைவை

உதறியே அமைதி யாக

     உறங்கியே துன்பம் வெல்வீர்!"

 

சுலைகாவின் பதில் :  

கெஞ்சியே வேண்டு கின்ற

     கிழவியின் வார்த்தை கேட்டுத்

"துஞ்சினேன் அந்நே ரத்தே

     தோன்றிய அவன்தான் என்னைப்

பஞ்சணை நீக்கித் தன்னைப்

     பணிந்திடச் செய்து ‘என்றும்

அஞ்சிடேல்’ என்று ரைத்தென்

     உறக்கமும் அழித்தான்’ என்றாள்.

 

பரிசு அறிவித்தல் :  

"உள்ளமும் உணர்ச்சி யும்என்

     உறக்கமும் கொள்ளை கொண்ட

கள்வனைப் பிடித்து வந்தென்

     காலடி நிறுத்துகின்ற

வல்லவர் எதைக்கேட்டாலும்

     வழங்குவே னென்றே எங்கும்

சொல்லு வீ"ரெனச் சுலைகா

     சொல்கையில் தைமூஸ் வந்தார்.