பக்கம் எண் :

96


"தின்றஅவ் வோனாய் கிடைத்திடுமோ!

     தெரிந்தால் பிடிக்கத் தடையில்லை!"

என்றனன் ஷம்ஊன் இதைக்கேட்டே

     இருவிழி சிவந்தார் யாக்கூபே!

 

"ஏதோ மர்மம் இதிலுண்டு

     என்னுயிர்ச் செல்வன் யூசுபைத்

தீதாய் நீவிர் கொன்றொழித்துத்

     தின்றது ஓநாய் என்கின்றீர்

வாதே வேண்டாம் உடன்சென்று

     வழியில் காணும் ஓநாய்கள்

ஏதோ ஒன்றை என்முன்னே

     இழுத்து வருவீர்" எனச்சொன்னார்.  

- - x - -