தைமூஸ் உறுதி கூறல்
"சுற்றிலும் அவனைத் தேடித்
துரிதமாய்ப் பிடிப்ப தற்கு
வெற்றிகொள் நமது வீரர்
விரைந்துளார், நான்கு திக்கும்
ஒற்றரும் அனுப்பி யுள்ளேன்
உறுதியாய்க் கொண்டு சேர்ப்பார்.
சற்றுநீ துயில்வாய்" என்று
சாற்றினார் தைமூஸ் மன்னர்.
- - x - -