வ
வி-கு :
‘ஈந்த’ என்னும் எச்சத்தை ‘மால்’ என்னும் பெயருடன்
முடிக்க. ‘நிமிர் சுடர், நிமிர்திரை’ என்பன வினைத்தொகைகள்.
ஈடு :
ஆறாம் பாட்டு. ‘அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு
வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே!’ என்று வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.
அமுதம் அமரர்கட்கு
ஈந்த ‘என்ன பரம உதாரனோ!’ என்கிறார். ‘நீ வேண்டா; எங்களுக்குச் சாவாமைக்கு உரிய பொருளை
உண்டாக்கித் தரவேண்டும்,’ என்றவர்களுக்கு அவர்கள் உகந்த பொருளைக் கொடுத்துவிடுவதே! அவர்கள்
பிரயோஜனத்தை அருவருத்து, தாம் உகந்த பிரயோஜனத்துக்கு உண்டான வேறு பாட்டினை அருளிச்செய்கிறார்;
நிமிர் சுடர் ஆழி நெடுமால்-இவருடைய அமிர்தம் இருக்கிறபடி. 1‘நால் தோள் அமுதே’
அன்றோ இவர்க்கு அமுது? 2‘அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்’ என்கிறபடியே,
கையுந்திருவாழியுமாய் அன்றோ அவருடைய அமிருதம் இருப்பது? தேவர்கள் விரும்பிய பலனைத் தலைக்கட்டிக்
கொடுக்கையாலே உண்டான புகர் திருஆழியிலே தோற்றும்படி இருத்தலின், ‘நிமிர்சுடர் ஆழி’
என்கிறார். ‘வேறு ஒரு பலனேயாகிலும் நம் பக்கல் கொள்ளப் பெற்றோமே!’ என்று கொண்ட
பெருமோகத்தின் மிகுதி தோன்ற நிற்றலின், ‘நெடுமால்’ என்கிறார்.
அமுதிலும் ஆற்ற இனியன்-தேவர்கள்
வாசி அறிவார்களாகில் இவனை அன்றோ பற்றுதல் வேண்டும்? ஆற்ற இனியன்-மிகவும் இனியன்.
3நாம் திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவ சாதி வெறும் 4மரையோ?
5‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே இவன்
அழகையும் இனிமையையும் விட்டு!’ என்பராம். நிமிர் திரை நீள் கடலானே - ‘அண்மையில் இலன்’
என்றுதான் விடுகிறார்களோ! அவ்வமிருதம் உண்டாகிற கடலிலே அன்றோ அவன் சாய்ந்தருளினான் என்பார்,
‘கடலான்’ என்கிறார். ‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங்
கொள்ள
1. திருவாய். 6. 10 : 9.
2. இரண்டாந் திருவந். 85.
3. நம்பி திருவழுதி நாடு தாசர் - இவர் அடியார் பெருமக்களுள் ஒருவர்.
4. மரை - மான் விசேடம்.
5. உப்புச் சாறு - அமிருதம்.
|