பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
3

New Page 1

    ‘மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனைப், பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள் பல் உலகீர் பரந்தே,’ (4. 10: 2.) என்றும், ‘வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகாய திருக்குருகூரதனை, உளங்கொள் ஞானத்துவைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே,’ (4. 10: 9) என்றும் ஆழ்வாருடைய திருவாக்குகள் இருப்பதனால், ‘வண்குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்,’ என்கிறார். ‘எல்லாச் செல்வமும் எழில் காரிமாறப் பிரானே,’ என்பர் ஆதலின், ‘தனத்தாலும் ஏதும் குறைவிலேன்’ என்கிறார். ‘அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும், தன்மையான் சடகோபன் என் நம்பியே’ எனப்படுதலால், ‘எந்தை சடகோபன்’ என்கிறார். ‘தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்று’ என்கிறபடியே, சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று,’ என்கிறார். பற்று - செல்வம்; கதியுமாம்.

4. அனந்தாழ்வான் அருளிச்செய்தது

        ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமா நுசமுனிதன்
        வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்-ஆய்ந்தபெருஞ்
        சீரார் சடகோபன் செந்தமிழ்வே தம்தரிக்கும்
        பேராத உள்ளம் பெற.


    பொ - ரை :
‘எல்லாராலும் கொண்டாடப்படுகின்ற பெரிய மிக்க புகழையுடைய ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த செம்மை பொருந்திய தமிழ் வேதத்தைத் தாங்கிக்கொள்ள வல்ல, வேறு ஒன்றிலும் செல்லாத மனத்தினைப் பெறும்பொருட்டு, தக்க கீர்த்தியையுடைய எம்பெருமானாருடைய பொருந்திய திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்,’ என்கிறார்.

    ‘தரிக்கும் உள்ளம்’ என்றும், ‘பேராத உள்ளம்’ என்றும் தனித்தனியே கூட்டுக. ‘பெற வணங்குகின்றேன்’ என முடிக்க. ‘ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்’ என்னுமாறு போன்று, ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமாநுசமுனி’ என்கிறார். ‘ஆய்கொண்ட சீர்’ என்றும், ஆய பெரும்புகழ்’ என்றும் சொல்லுகிறபடியே, இவரும் ‘ஆய்ந்த பெருஞ்சீர்’ என்பதனைச் செந்தமிழ் வேதத்திற்கு’ அடைமொழி ஆக்குதலுமாம். ‘சீர்த்தொடை ஆயிரம்’ என வருதல் காண்க. எம்பெருமானார், மாறன் அடி பணிந்து உய்ந்தவராதலாலும், மாறன் பணித்த மறையை உணர்ந்தவராதலாலும், தென்குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசுந்தமிழ்