பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
4

தன

தன்னைத் தம் பத்தி என்னும் வீட்டின்கண் வைத்தவர் ஆதலாலும், பண்தருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாக உடையவர் ஆதலாலும், திருவாய்மொழி இன்னிசை மன்னும் இடந்தொறும் நிற்குமவர் ஆதலாலும், ‘உறுபெருஞ்செல்வமும் மாறன் விளங்கிய சீர் நெறிதரும் செந்தமிழ்,’ என்று அறிதர நிற்குமவர் ஆதலாலும், அத்தகைய இராமாநுசரைப் ‘பேராத உள்ளம் பெற வணங்குகின்றேன்’ என்கிறாய்.

5. பட்டர் அருளிச்செய்தவை 

        வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வண்புகழ்மேல்
        ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
        முதல்தாய் சடகோபன்; மொய்ம்பால் வளர்த்த
        இதத்தாய் இராமா நுசன்.


    பொ - ரை :
‘ஆகாயத்து அளவும் ஓங்கி விளங்குகிற சோலைகளையும் மதில்களையுமுடைய திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுடைய வளப்பம் பொருந்திய நற்குணங்கள் விஷயமாக அமைந்த தமிழ் வேதமாகிய ஆயிரம் திருப்பாசுரங்களையும் பெற்ற நற்றாய், ஸ்ரீ சடகோபர் ஆவார்; அவற்றை வலிமையோடு வளர்த்த நன்மையுடைய செவிலித்தாய் எம்பெருமானார் ஆவார்,’ என்றவாறு.

    பத்துப் பத்தாலும் சொல்லப்படுகின்ற ‘பரபரன்’ என்றதனால் சொல்லப்படுகிற முதன்மையும், ‘சோராத எப்பொருட்கும் ஆதி’ என்றதனால் சொல்லப்படுகிற காரணமும், ‘முழுதுமாய் முழுது இயன்றாய்’ என்றதனால் சொல்லப்படுகின்ற நிறைவும், ‘மறுகல்இல் ஈசன்’ என்றதனால் சொல்லப்படுகின்ற ஏவுதலும், ‘ஆஆ என்று அருள்செய்து’ என்றதனால் சொல்லப்படுகிற அருளும், ‘ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள்’, ‘வரங்கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரண்’, என்கிறவற்றால் சொல்லப்படுகிற பற்றுக்கோடாதலும், ‘எண்ணிலாப் பெருமாயனே’ என்றதனால் சொல்லப்படுகிற வரம்பில் ஆற்றலும், ‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்,’ என்றதனால் சொல்லப் படுகிற விரும்பியவாறே செய்து முடித்தலும், ‘எண்திசையும் கீழுமேலும் முற்றவும் உண்டபிரான்’ என்றதனால் சொல்லப்படுகிற ஆபத்துக்குத் துணையாதலும், ‘சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க் காளமேகம்’ என்றதனால் சொல்லப்படுகிற துன்பத்தைத் துடைத்தலும் ஆகிற இப்பத்து அர்த்தங்களும், திருவரங்கநாதன் விஷயமாக