|
ப
வியாக்கியானத்தில்
வந்துள்ள ஐதிஹ்யங்கள்
பிள்ளைதிருநறையூர்
அரையர் : “ஒரு குருவி பிணைத்தபிணை ஒருவரால்
அவிழ்க்கப்போகிறதில்லை; சர்வசக்தி கருமானுகுணமாகப் பிணைத்த பிணையை அவனையே கால் கட்டியவிழ்த்துக்
கொள்ளுமித்தனைகாண்.”
பக். 14.
ஆழ்வான் :
“ஆழ்வான் பிள்ளைப்பிள்ளையைப் பார்த்து நிர்க்குணமென்பார்
மிடற்றைப் பிடித்தாற்போலே ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே.”
பக். 61.
எம்பார் :
“ஆழ்வார் பிரபந்நரோ, பத்திநிஷ்டரோ?”
என்று எம்பாரைச் சிலர் கேட்க, “ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்குத் தேக யாத்ராசேஷம்,”
என்று அருளிச்செய்தார். ‘எவ்வாறு?’ எனின், நாமனைவரும் பிரபந்நர்களாகவிருப்பினும், ஓராண்டிற்கு
அல்லது, ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப் பொருள்களை முன்னரே தேடிக்கொள்ளுகிறோமன்றோ? அது
போன்று, ‘உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணனே’ ஆவன் இவர்க்கு.
பக். 63.
எம்பார் :
‘தொழில் செய்வதற்காயின் இறைவன் திருவருள்
வேண்டும்; தொழில் செய்யாதிருப்பதற்கு அவன் அருள் வேண்டுமோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க,
‘சுவர்க்கத்தினின்றும் விழுகிற திரிசங்குவைச் சத்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்றுக்
கண்டாயே! அப்படியே, நிவர்த்திக்கும் அவன் வேணுங்காண்,’ என்று அருளிச்செய்தார்.
பக். 87.
நஞ்சீயர்
:
ஒருவனுக்கு வைஷ்ணவத்துவம் உண்டு இல்லை என்னுமிடம் தனக்கே தெரியுங்காண்,’ என்று சீயர் பலகாலும்
அருளிச்செய்வார்; அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில், அவன்
நமக்குப் பகவத் சம்பந்தம்உண்டு’ என்றிருக்க அடுக்கும்; ‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு!’
என்றிருந்தானாகில், அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்றிருக்க அடுக்கும்,’ என்பதாம்.
பக். 107.
|