|
பட
பட்டர் :
சம்பந்த ஞானமே வேண்டும் என்றார்; ‘எங்ஙனம்?’
எனின், ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்றிருக்குங்காலத்தில் பொருள் தேடும் விருப்பினால் வெளி
நாடு சென்றான்; அவளும் கருவுயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய வாணிகமே
தொழிலாய்ப் பொருள் தேடப் போனான்; இருவரும், தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக் கொண்டு
வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பறுத்து எய்ய
வேண்டும்படி விவாதமுண்டான சமயத்தில், இருவரையும் அறிவான் ஒருவன் வந்து, ‘இவன் உன் தமப்பன்;
நீ இவன் மகன்,’ என்று அறிவித்தால், கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும்
ஒன்றாய், அவன் காப்பாற்றுகின்றவனாய், இவன் காப்பாற்றப்படும் பொருளாய்க் கலந்துவிடுவார்களன்றோ?
அது போன்று ‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால் ஒருவன்
இருவினைப் பயன்களை நுகராநிற்பவன்; நாம் ஏவப்படும் பொருள் என்னும் முறையறியவே பொருந்தலாமன்றே!
பக். 120.
‘ஓர் அரசகுமாரன்
பூங்காவொன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தமப்பனதுகாண்’ என்னவே, நினைத்தபடி நடந்து
கொள்ளலாமன்றோ! ஆன பின்னர், ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்’ என்னும் நினைவே வேண்டுவது, தானும்
அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்,’ என்கிறார்.
பக். 121.
எம்பெருமானார்
: ஓர் அயநத்தினன்று குன்றத்துச் சீயர் எம்பெருமானார்
ஸ்ரீபாதத்திலே புக, அவருடைய சிறு பெயரைச் சொல்லி, ‘சிங்கப்பிரான்! இன்று அயநங்காண்’ என்ன,
திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாதிருக்க, ‘உயிர் உடலை விட்டு
நீங்கும் அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில்
ஓராண்டு கழியப்பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்ததில்லையோ!’ என்றருளிச்செய்தார்.
பக்.
126.
ஆழ்வான் :
ஆழ்வான்
இப்பாட்டளவு வரப் பணித்து, இப்பாட்டு வந்தவாறே ‘இத்தையும் நும் ஆசிரியர் பக்கல் கேட்டுக்
கொள்ளுங்கள்,’ என்ன, பட்டரும் சீராமப்பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார், இன்னார் போவார் என்று தெரியாது. இருந்து கேளுங்கள்,’
|