|
என
என்று திருமந்திரத்தை
உபதேசித்து, இப்பாட்டைக் கூறி, ‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கள்’ என்று பணித்தார்.
பக். 129.
எம்பெருமானார்
: சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில்
ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விவரமாகச் சொல்லிக்கொண்டு போந்தோம்; அதுதானே இவர்களுக்கு
‘இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடலாயிற்று; அவ்வெளிமைதானே பற்றுகைக்கு உடலாயிற்று உமக்கு
ஒருவருக்குமே! என்று எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தார்.
பக். 133.
பட்டர் :
‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில் அவன் பலனைக்
கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க,
‘அவனையடையுமிடத்தில் இவன் குற்றம் பாராதே தன்னிழலிலே இவனை வைத்து, அவன் பக்கல் முகம் பெற்றவாறே
குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நந்திருவுடையடிகள்தம்
நலங்கழல் வணங்கி,’ என்னாநின்றது கண்டீரே!’ என்றருளிச்செய்தார்.
பக். 167.
முற்காலத்தில்
சிற்றறிஞன் ஒருவன், ‘பற்றற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப்
பொருளை உள்ளவாறு கூறுகின்றன’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இத்திருவாய்மொழி
வந்த அளவில் ‘இது காமுகர் வாக்கியமாக இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்; ‘இறைவன் கேட்கத்தக்கவன்,
நினைக்கத்தக்கவன், தியானம் செய்யத்தக்கவன், பார்க்கத்தக்கவன்’ என்று விதிக்கிற பகவத்
காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவனாதலாலே.
பக். 178.
பட்டர் :
‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த
பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும், ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு திரியச் சாதி
வீறு பெற்றபடி,’ என்று ரசோக்தியாக அருளிச் செய்வர்.
பக். 182.
தெற்காழ்வான்
: ‘ஒரு
முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாதுகாண்: தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக்கொண்டு
போகில் போகும் அத்தனை ஒழிய, ஒன்றிரண்டு முழுக்கால் போகாதுகாண் நான் பண்ணின பாவம்!’ என்று
திருக்கோட்டியூரிலே தெற்காழ்வான் கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையில் சொன்ன வார்த்தையை
நினைவு கூர்வது.
பக். 190.
|