பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
377

பட

    பட்டர் : பட்டரை ஒரு தமிழ்ப் புலவர், ‘கேட்டிரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன, ‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்றிருக்க வேண்டாவோ?’ என்றருளிச்செய்தார்; கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதுமுளதோ?’ என்ன, ‘புல்லிக் கிடந்தேன்,’ ‘காதலர் தொடுவுழித் தொடுவுழி’ என்பன போன்ற தமிழ்ப்பாக்களை நீ அறியாயோ?’ என்றருளிச்செய்தார்.

பக். 198.

    பட்டர் : ‘நம்பியேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்கென்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீவைஷணவர்களுடன் பரிமாறும், படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்றருளிச்செய்தார்.

பக். 204.

    பெரிய திருமலைநம்பி : பெரிய திருமலை நம்பி, தமது இறுதிக் காலத்திலே, தமக்கு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; அவர் திருமுன்பு திருத்திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான், இனியுனது, வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

பக். 214.

    பட்டர் : புகைபூவே - அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும். இவ்விடத்தில், பட்டர் ‘செதுகையிட்டுப் புகைக்க அமையும், கண்டகாலி இடவும் அமையும்’ என்றருளிச்செய்வர். இங்ஙனம், பட்டர் அருளிச்செய்தவாறே, ‘இறைவனுக்குக் கண்டங்கத்தரிப்பூவை அருச்சித்தல் கூடாது’ என்று சாஸ்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று நஞ்சீயர் கேட்க, ‘அவனுக்கு ஆகாது என்கிறதன்று; பறிக்கிற அடியார் கையில் முள் பாயும் என்பதற்காகத் தவிர்த்தனகாணும்! ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும்முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத்துழாயோடு அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் திருமங்கை மன்னன் அருளிச்செய்கிறது கண்டீரே! இதனால், இறைவன் பொருளில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது இன்று என்பது விளங்குமே! மற்றும், பிரகிருதி சம்பந்த