|
ம
மில்லாத பொருள்தான் வேண்டும்
என்றிருந்தானாகில், ‘புள்ளாய் ஓரேனமுமாய்’ அவதரிப்பானோ? ஸ்ரீவைகுண்டத்தில் இரானோ?’ என்றருளிச்செய்தார்.
பக். 266.
நம்பி திருவழுதி
நாடு தாசர் : நம்பி திருவழுதி நாடு தாசர்,
‘இத்தேவசாதி வெறுமரையோ, உப்புச்சாறு கிளருவது எப்போதோ?’ என்று பார்த்துக் கிடப்பதே இவன்
அழகையும் இனிமையும் விட்டு!’ என்பராம்.
பக். 272.
பட்டர் :
பட்டர் திருவோலக்கத்துக்குச்
சாஸ்திரியாயிருப்பார் ஒரு பிராமணர் பல காலும் செல்வர்; அவரைக் கண்டால் பட்டர் ‘வந்தாயோ,
போனாயோ’ என்று சாமான்யமாக வியவஹரித்து அருளிச்செய்வர்; ஒரு ஸ்ரீவைஷ்ணவர், பலகாலும் சேவிக்க
எழுந்தருளுவர்; அவரைக் கண்டால் மிகவும் கிருபை பண்ணி ஆதரித்துக் கொண்டு எழுந்தருளியிருப்பார்.
இதனைப் பல காலும் கண்டிருப்பார் ஒருவர் வந்து, பட்டரைச் சேவித்து, ‘ஸ்வாமீ’ தேவரீர் திருவோலக்கத்துக்கு
வருகிற சாஸ்திரி பிரசித்தராயிருக்கிறவர்; அவர் வந்தால் சாமான்யமாக வியவஹரித்தருளுகிறது,
ஒரு சாது ஸ்ரீவைஷ்ணவர் வந்தார் என்றால் அவரை மிகவும் பிரதிபத்தி பண்ணி அருளுகிறது காரணத்தை
எனக்கு அருளிச்செய்ய வேண்டும்,’ என்ன, ‘ஆனால், எப்போதும் போலே நாளையும் அவ்விரண்டு பேர்களும்
வருவார்கள்; அப்போது நீயும் எப்போதையும் போலே பார்த்திரு; காரணம் சொல்லுகிறோம்’ என்ன,
அவரும் அப்படியே பார்த்திருக்க, அவரை எப்போதையும் போலே வினவியருளி, ‘நீர் ஆரைத்தான்
பரதத்துவம் என்று நினைத்திருக்கிறது?’ என்ன, ‘சில பிரமாணங்கள் பிரஹ்மாவே பரதத்துவம் என்று
சொல்லுகின்றன; சில பிரமாணங்கள் விஷ்ணுவே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; சில பிரமாணங்கள்
சிவனே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; ஆகையினாலே, நம்மாலே நிச்சயிக்கப் போமோ?’ என்ன,
‘நன்று’ என்று இருந்து, அவர் போனவாறே, ஸ்ரீவைஷ்ணவர் எழுந்தருளிச் சேவிக்க, அவரையும் கிருபை செய்தருளி,
‘தேவரீர் யாரைத்தான் பரதத்துவம் என்றிருப்பீர்?’ என்ன, ‘தேவரீர் ஸ்ரிய:பதி நாராயணனே
பரதத்துவம் என்றருளிச்செய்யுமே! அஃதொழிய அடியேன் வேறு ஒன்றறியேன்,’ என்ன, ‘இன்னம் உமக்குத்
தஞ்சமாக நினைத்திருப்பது என்?’ என்ன, ‘எம்பெருமானார் திருவடிகளே உபாயமும் உபேயமும் என்று பிரசாதித்தருளுமே,
அத்தையே தஞ்சமாக நினைத்
|