|
த
திருப்பேன்,’ என்ன, திருவுள்ளம்
உவந்து, ‘அபசாரத்தை க்ஷமித்தருள்க! திருமாளிகைக்கு எழுந்தருள்க!’ என்றருளிச்செய்து பார்த்திருந்தவரைப்
பார்த்து, ‘கண்டீரே இருவர்க்கும் உண்டான தாரதம்யம்? ஆகையாலே, இவரை வணங்கவோ, அவரை வணங்கவோ?
இப்படியன்றோ ஸ்வரூப ஸ்திதி இருந்தது?’ என்றருளிச்செய்ய, அவரும் கிருதார்த்தரானார் என்ற ஐதிஹ்யம்
‘துயக்கன் மயக்கன்’ (பா. 95) என்ற பாசுரத்தில், ஜீயர் அரும்பதத்தில் காணப்படுகின்றது.
வேல்வெட்டி நம்பியார்
: வேல்வெட்டி நம்பியார், நம்பிள்ளையைப்
பார்த்து, ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கிருத்தல் முதலிய சில நியமங்களோடே
சரணம் புக்கார்; ஆதலின், இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள்
வேண்டியிருக்கிறதோ?’ என்று கேட்க, ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடைவதற்குத் தக்கவர்’
என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிறவிடத்தில்,
கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்றில்லை; ‘ஆக இத்தால் சொல்லிற்றாயிற்று என்?’ என்னில்,
‘பெருமாள், இட்சுவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே சில நியமங்களோடே சரணம்புக்கார்;
ஸ்ரீவிபீஷணாஷ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே,
யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா; அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க
வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்,’ என்றருளிச் செய்தார்.
பக். 351.
ஐதிஹ்யங்கள் முற்றின.
|