பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
391

அப

அபிநயித்துக் காட்டும் அரையர்களுள் தலைவர்; ‘திருவரங்கப் பெருமாளரையர்’ எனவும் வழங்கப்படுவர்.

    ஆழ்வான் :
இவர் காஞ்சிபுரத்திற்கு அண்மையிலுள்ள கூரம் என்ற ஊரில் அவதரித்தவராய், அத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய ‘ஆழ்வான்’ என்ற திருநாமத்தை வகித்தவராதலால், ‘கூரத்தாழ்வான்’ என்று வழங்கப்பட்டார். ‘திருமறு மார்பன்’ என்றது இவரது திருப்பெயர். விழுமிய செல்வமும் உயரிய ஒழுக்கமும் சீரிய கல்வியும் படைத்தவர்; செல்வமனைத்தையுந்துறந்து, திருவரங்கத்தையடைந்து, தம் ஆசாரியரான இராமாநுசருடைய திருவடி நிழலில் ஒதுங்கி வாழ்ந்தவர்; இராமாநுசர் பிரமசூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் செய்த காலத்தில் அவருக்கு உறுதுணையாய் இருந்தவர்; விஹித விஷயத்தையும் துறந்தவர்; சோழவரசன் அவைக்களத்தில் ‘சிவத்துக்குமேற் பதக்கு உண்டு’ என்று தீட்டினவர்; தரிசனத்திற்காகத் தரிசனத்தைக் கொடுத்தவர்; சிஷ்யலட்சணத்திற்கும் ஆசாரிய லட்சணத்திற்கும் எல்லை நிலமானவர்; பட்டருக்கும் சீராமப் பிள்ளைக்கும் தமப்பனார்; அவர்கட்கு ஆசாரியருமாவார். ஆண்டாள் இவருடைய திருத்தேவியார். வானிட்ட கீர்த்தி வளர்கூரத்தாழ்வான்’ என்பர் திவ்வியகவி ஐயங்கார். ‘மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம், குழியைக் கடத்தும் நம் கூரத்தாழ்வான்’ என்பர் அமுதனார். ஒரு நாள் இவர் ‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியை அநுசந்தித்துக்கொண்டிருக்க, பட்டர், ‘ஐயா, ‘ஆழ்வார் ‘சிறுமாமனிசர்’ என்று சிறுமை பெருமையாகிற பரஸ்பர விருத்த தர்மங்களிரண்டும் ஒரு பொருளிலே கிடக்கும்படி அருளிச் செய்கிறாரே! இது என்?’ என்று கேட்டருள, இவரும், ‘நல்லீர், கேட்டபடி அழகிது! நீர் உபநயனம் ஆகாதவராகையாலே சாஸ்திரங்களைக்கொண்டு இசைவிக்கவொண்ணாது; கண்கூடாக உமக்குக் காட்டுகிறோம்; கேளீர்; திருமேனி சிறத்து ஞானம் பெருத்திருக்கிற சிறியாச்சான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் போல்வாரை காணும் ‘சிறு மா மனிசர்’ என்கிறது, என்று அருளிச்செய்தவர். இவர் அருளிச்செய்த நூல்கள்: வரதராஜ ஸ்தவம், சுந்தரபாஹூ ஸ்தவம், ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமாநுஷ ஸ்தவம், யமகரத்நாகரம், கத்யத்ரய வியாக்கியானம் என்பனவாம்.

   
ஆளவந்தார் : இவர், சிதம்பரத்தையடுத்த காட்டு மன்னார்கோவிலிலே ஆடி மாதத்திலே உத்திராட நக்ஷத்திரத்தில் ஈஸ்வர முனிகட்குப் புதல்வராய்த் தோன்றியவர். மணக்கால் நம்பிகள்