பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
394

New Page 1

பெயர். இவர் இளமைப்பருவத்தில் யாதவப்பிரகாசர் என்னும் ஏகதண்ட சந்யாசியாரிடம் வேதாந்த பாடம் கேட்டனர், பின்பு அவ்யாதவப்பிரகாசரே இவரிடம் திரிதண்ட சந்யாசாதிகளைப் பெற்றுக் ‘கோவிந்த ஜீயர்’ என்ற பெயரோடு இவருக்கு மாணாக்கராயினார். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்குப் பரமாசாரியர்; ‘தூய்நெறிசேர், எதிகட்கிறைவன் யமுனைத்துறைவ னிணையடியாம், கதிபெற்றுடைய இராமாநுசன்’ என்பர் அமுசனார். ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்களான பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டன், திருவரங்கப்பெருமாளரையர், திருமலை நம்பி என்னும் ஐவரும் இவருக்கு ஆசாரியர்கள். இவர்களுள், பெரிய நம்பி, இவர்க்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்தருளித் திருமந்திரம் துவயம் சரமஸ்லோகம் இவற்றையும் உபதேசித்து ‘இராமாநுசன்’ என்ற திருப்பெயரை வைத்து, முதலாயிரம், இயற்பா என்ற ஈராயிர மூலத்தையும் அருளிச் செய்தார். திருக்கோட்டியூர் நம்பி, இவர்க்குத் திருமந்திரார்த்தத்தையும் சரமஸ்லோகார்த்தத்தையும் அருளிச்செய்து, ‘எம்பெருமானார்’ என்ற திருப்பெயரை வைத்தனர். திருமாலையாண்டான், இவர்க்குத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானம் அருளிச்செய்து ‘சடகோபன் பொன்னடி’ என்ற திருப்பெயரை வைத்தனர். திருவரங்கப் பெருமாளரையர், இவர்க்குப் பெரியதிருமொழி மூலம், திருவாய்மொழி மூலம், கண்ணி நுண்சிறுத்தாம்பு வியாக்கியானம், துவயார்த்தம் ஆகிய இவற்றை அருளிச்செய்து, ‘லக்ஷ்மணமுனி’ என்னும் திருப்பெயரை வைத்தனர். பெரியதிருமலைநம்பி, இவர்க்கு ஸ்ரீராமாயண வியாக்கியானம் அருளிச்செய்து, ‘கோயில் அண்ணன்’ என்ற திருப்பெயரை வைத்தனர்.

   
இவர், ஸ்ரீ ஆளவந்தாருடைய மூன்று குறைகளையும் தீர்த்தவர்; ‘பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்’ என்கிற ‘உபய விபூதி ஐஸ்வரத்தையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம்’ என்று திருவரங்க நாதனால் தரப்பெற்றவர்; திருவரங்கன் செல்வ முற்றும் திருத்தினவர்; செல்வப் பிள்ளையைக் கொணர்ந்து திரு நாராயணபுரத்தில் பிரதிஷ்டை செய்தவர்; உலகினருய்ய இவரால் செய்யப்பட்ட காரியங்கள் இன்னும் மிகப்பல. ‘பிடிக்கும் பரசமயக் குலவேழம் பிளிற வெகுண்டு, இடிக்கும் குரற்சிங்க ஏறனையான் எழுபாரு முய்யப், படிக்கும் புகழ் எம்மிராமாநுசன்’ என்பர் திவ்விய கவி ஐயங்கார். ‘பல்கலையோர் தாம் மனன் வந்த இராமாநுசன்’ என்பது அமுதனார் திருவாக்கு. இவர், தம் அந்திமகாலத்தில்