|
அ
அருளிச்செய்தவை : (1) ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும், வாசிப்பித்தும் போருதல்; அதற்குத் தகுதியில்லாவிடில் (2)
அருளிச் செயலை ஓதியும் ஓதுவித்தும் போருதல்; அதற்கும் தகுதியில்லையாகில், (3) உகந்தருளின
நிலங்களிலே அமுதுபடி, சாத்துபடி முதலானவற்றையுண்டாக்கி நடத்திக்கொண்டு போருதல்; அதற்கும் தகுதியில்லையாகில்,
(4) திருநாராயண புரத்தே ஒரு குடில் கட்டிக் கொண்டிருத்தல்; அதற்கும் தகுதியில்லையாகில் (5) துவயத்தை அர்த்தாநுசந்தானம் பண்ணிப் போருதல்; அதற்கும் தகுதியில்லையாகில், (6) என்னுடையவன்
என்று அபிமானிப்பான் யாவனொரு பரம பாகவதன் அவனுடைய அபிமானத்திலே ஒதுங்கிப்போருதல். இவர்
அருளிச்செய்த நூல்கள் :- ஸ்ரீ பாஷ்யம், வேதாந்தசாரம், வேதாந்த தீபம், வேதாந்த சங்கிரகம்,
கத்யத்ரயம், உடையவர் நித்தியம், கீதாபாஷ்யம் என்பன. இப்பெரியார், இப்பூவுலகில் நூற்றிருபது
வருடங்கள் பஞ்சபூதமயமான தம் திருமேனியோடு வாழ்ந்திருந்தனர்.
குன்றத்துச்சீயர்
: இவர் இராமாநுசர் காலத்திலிருந்தவர்;
அவருடைய மாணாக்கராகவும் இருத்தல் கூடும்.
பக். 162இல் காண்க.
சொட்டை நம்பிகள்
: ஸ்ரீ ஆளவந்தாருடைய திருக்குமாரர்;
‘என்னாச்சான்’ என்பவருக்குத் தமப்பனார். எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்; திருவாய்மொழிக்கு
‘மனத்தாலும் வாயாலும்’ என்ற தனியனை அருளிச்செய்தவர்.
திருக்குருகைப்பிரான்
பிள்ளான் : இவர், பெரிய திருமலை நம்பியின் புதல்வர்; இராமாநுஜருடைய மாணாக்கர்; திருவாய்
மொழிக்கு ‘ஆறாயிரப்படி’ என்னும் வியாக்கியானத்தை அருளிச் செய்தவர்; ‘பிள்ளான்’ என்பது
இவருடைய இயற்கைப்பெயர். திருக்குருகைப்பிரான் என்பது நம்மாழ்வாருடைய திருப்பெயர்; அவருடைய திருப்பெயரை,
அவருடைய நினைவின்பொருட்டுத் தம்மாணாக்கரும் அபிமான புத்திரருமான இவருக்கு வைத்தனர் இராமாநுஜர்.
பின்னர், ‘திருக்குருகைப்பிரான் பிள்ளான்’ என்றே இவர் அழைக்கப்பட்டனர். தி்ருவரங்கத்தில்
வாழ்ந்தவர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்.
திருக்கோட்டியூர்
நம்பி :
இவர் ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்; இராமாநுஜருக்கு ஆசாரியர். இராமாநுஜர், இவரிடமே திருமந்திரார்த்தத்தையும்,
சரமஸ்லோகார்த்தத்தையுங் கேட்டனர். திருக்கோட்டியூரில் அவதரித்தமையால் திருக்கோட்டியூர்
நம்பி
|