பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
396

எனப

எனப் பெயர் பெற்றார். புதல்வர், தெற்காழ்வான். புதல்வியார், தேவகி பிராட்டியார். ‘சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் வேதாத்தியயனம் பண்ணினாற்போலேகாணும் உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறதும்; ஆளவந்தார் திருவுள்ளத்திலுள்ள அர்த்தமொழிய இவர்க்கு வேறே பிரகாசியாது என்றிரும்; இவர்க்கு நீர் அறிவின்மையைப் போக்குகிறோம் என்றிராதே கொள்ளும்,’ என்று திருமாலையாண்டானிடத்தில் இராமாநுசருடைய பிரபாவத்தை அருளிச்செய்தவர்.

    திருமாலையாண்டான் : இவர், ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்; இராமாநுசருடைய ஆசிரியர் ஐவருள் ஒருவர். இவரிடமே திருவாய்மொழியைப் பாடங்கேட்டனர் இராமாநுசர். இவர் அவதரித்த ஊர் அழகர் கோவில்; வாழ்ந்த ஊர் திருவரங்கம். மாலாதரர், ஞான பூர்ணர் என்பன இவருடைய வேறு திருப்பெயர்கள்.

    தெற்காழ்வான், கோளரியாழ்வான் : இவரிருவரும் பட்டர் காலத்தில் இருந்த அடியார்கள்; திருக்கோட்டியூரில் வாழ்ந்தவர்கள். (பக். 190 காண்க). நஞ்சீயர் : இவர், பட்டருடைய மாணாக்கர்; நம்பிள்ளையின் ஆசாரியர்; திருவாய்மொழிக்கு ‘ஒன்பதினாயிரப்படி’ என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்; ‘வேதாந்தி’ என்ற சிறப்புப் பெயரையுடையவர். இருபெருஞ்செல்வங்களாலும் நிறைவுற்று அவற்றால் வீறுற்று மேல்நாட்டில் இருந்த இவர், பட்டரால் திருத்திப் பணிகொள்ளப்பட்டார். பின்னர்த் துறவறத்தை மேற்கொண்டதனால் ‘சீயர்’ என்றும் பட்டரால் ‘நம்முடைய சீயர்’ என்று அபிமானிக்கப்பெற்றமையால் ‘நஞ்சீயர்’ என்றும் வழங்கப்பட்டனர். இவர் திருவாய்மொழிக்கு நூறுரு பொருள் கூறியருளினார் எனின், இவருடைய ஞானத்திற்கும் ஆற்றலுக்கும் பிறிதொரு சான்றும் வேண்டுமோ? இவர் வாழ்ந்த ஊர் திருவரங்கம். இவர் அருளிச்செய்த வேறு உரைகள்; திருப்பாவைக்கு ஈராயிரப்படி, திருவந்தாதிகள் கண்ணிநுண்சிறுத்தாம்பு திருப்பல்லாண்டு இவைகட்கு வியாக்கியானம், இரஹஸ்யத்ரய விவரணமாக நூற்றெட்டுச் சரணாகதி கத்ய வியாக்கியானம் என்பன.

   
நம்பி திருவழுதிநாடு தாசர் : இவர் பட்டர் காலத்தவர். ‘இத்தேவசாதி வெறுமரையோ, உப்புச்சாறு கிளருவது எப்போதோ?’ என்று கவிழ்ந்து பார்த்துக்கிடப்பதே, இவன் அழகையும் இனிமையையும் விட்டு’ என்று கூறினவர். (பக். 272 காண்க).