|
நம
நம்பிள்ளை
: இவர் திருவரங்கத்திற்குத்
தெற்கேயுள்ள நம்பூர் என்ற தலத்தில் அவதரித்தவர்; வரதராஜர் என்பது இவருடைய திருப்பெயர்;
திருக்கலிகன்றி தாசர் என்பது ஆசாரியரால் இடப்பட்ட பெயர். கந்தாடை தோழப்பரால்
‘லோகாசாரியர்’ என்ற திருப்பெயர் இடப்பட்டவர்; நஞ்சீயருடைய மாணாக்கர். நஞ்சீயர்,
இவருடைய குணாதியங்களைக் கண்டு மகிழ்ந்து ‘நம்பிள்ளையோ!’ என்று தழுவிக்கொண்டார்; அது முதல்
‘நம்பிள்ளை’ என்ற பெயர் இவருக்கு வழங்கலாயிற்று. இவர், தென்சொற்கடந்து வடசொற்கடற்கு
எல்லை தேர்ந்தவர்; திருவாய்மொழிக்கு நூறுரு அர்த்தம் நிர்வகித்த தம் ஆசாரியரான நஞ்சீயருக்குச்
சதாபிக்ஷேகம் செய்தவர்; ‘ஆத்துமாவிற்குச் சரீரவிஸ்லேஷம் பிறந்தால் பரமபதம் சித்தம்’ என்று
அறுதியிட்டிருப்பது எவ்வர்த்தத்தாலே?’ என்று ஒருவர் கேட்க, ‘திருமகள் கேள்வனை உபாய உபேயம்
என்று அறுதியிட்டிருப்பது, நெடுங்காலம் இழந்து கிடந்த வஸ்துவைக் காட்டித் தந்த ஆசாரியன் பக்கல்
கனக்க விஸ்வாசமுண்டாயிருப்பது. அருளிச் செய்த ஸ்ரீபாஷ்யத்தின்படியே எம்பெருமானார் தரிசன ஸ்தாபனம்
பண்ணுவது, ஆழ்வார்கள் அருளிச்செயல்களாலே போது போக்குவது ஆகிய இவை உண்டானால்,
‘மீட்சியின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே’ என்கிறபடியே, பரமபதம் சித்தம்; சந்தேகிக்க
வேண்டா,’ என்றருளினவர். பாண்டி நாட்டினின்றும் வைஷ்ணவர் சிலர் வந்து, ‘எங்கட்குத் தஞ்சமாக
இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்யவேண்டும்’ என்று விண்ணப்பஞ்செய்ய, ‘கடற்கரைவெளியை நினைத்திருங்கோள்’
என்ன, அவர்களும், ‘மணற்குன்றையும் புன்னை மரங்களடர்ந்த காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று
விண்ணப்பஞ்செய்ய, கேட்டுப் புன்முறுவல் செய்து, ‘சக்கரவர்த்தி திருமகன் கடற்கரையிலே ஓர்
அமிர்தக் கடல் போலே பெரிய வானர சேனையோடே விட்டிருக்க, அக்கரையிலே பையல் இராவணன்
இருக்க, எழுபது கோடி சேனைகளும் உணர்ந்து, பெருமாளைக் குறிக்கொண்டு நோக்கிக்கொண்டு போர,
அவர்கள் பிரகிருதிமான்களாகையாலே கண்ணுறங்கிக் காலோய்ந்து கைசோர்ந்தவளவிலே, தாமும் தம்
திருத்தம்பிமாருமாகத் திருவரையில் கட்டின கச்சும், சுருக்கிய சீராவும் நாணியும், முதுகிலே கட்டின
அம்பறாத்தூணியும், கையிலே தரித்துப் பிடித்துப் பெருக்கின திருச்சரமும், தரித்த திருவில்லும்
தாமுமாய், சில அண்டஜங்கள் முட்டையிட்டுத் தம் சிறகின்கீழே நோக்கியிட்டுவைக்குமாறு போன்று,
எழுபது வெள்ளம் மஹா சேனையையும் நடையாடு மதில்கள் போலே ரக்ஷித்துக்கொண்டு ஓரிரவெல்லாம்
சாரிகையாய் வந்த சக்கரவர்த்தி திருமகனுடைய
|