பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
398

New Page 1

கையும் வில்லுமே தஞ்சம் என்று இரும்’ என்று அருளினவர். இப்பெரியாருடைய திவ்யசரிதம் விரிப்பின் பெருகும்.

    நம்பியேறுதிருவுடையான் தாசர் : இவர், பட்டர் காலத்தவர். ‘நம்பியேறுதிருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்குற்று எழுந்துநின்று, ‘அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் பரிமாறும்படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்’ என்று பட்டரால் கூறப்படும் பெருமை வாய்ந்தவர்.  (பக். 204 காண்க) இவர் நாடார் மரபில் தோன்றியவரெனக் கருதப்படுகிறார்.

    நாதமுனிகள் : ஆசாரிய பரம்பரைக்கு முதல்வர் இவரே. ‘நாதன்’ என்பது இவருடைய இயற்பெயர். நம்மாழ்வாரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட அர்த்தங்களை அடைவே எப்பொழுதும் மனனம் செய்துகொண்டு இருக்கின்ற அந்தணர் பெருமான் ஆதலின், ‘நாதமுனி’ என வழங்கப்பட்டார். முனி மனனசீலர். யோகமார்க்கத்தால் நம்மாழ்வாரை நேரிற்கண்டு, திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களை அவரிடம் பெற்று, அவற்றை இயலும் இசையுமாக வகுத்து உலகத்தில் பரவச்செய்தவர்; திருவாய்மொழிக்கு ‘பக்தாம்ருதம்’ என்ற தனியனை அருளிச்செய்தவர். இவரை, ‘ஆரப் பொழில் தென்குருகைப்பிரான் அமுதத் திருவாய், ஈரத் தமிழினிசையுணர்ந்தோர்கட்கு இனியவர்தம், சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாதமுனி’ என்பர் அமுதனார். இவர் யோகீஸ்வரர்; காட்டுமன்னார் கோவிலில் அவதரித்தவர்; ஸ்ரீ ஆளவந்தாருக்குப் பிதாமகர்; ஈஹ்வரமுனிகளுக்குத் தமப்பனார். அருளிச்செய்த நூல்கள்: நியாயதத்துவம், யோகரஹஸ்யம், புருஷநிர்ணயம் என்பன.

   
பட்டர் : இவர் கூறத்தாழ்வான் திருக்குமாரர்; திருவரங்கநாதனுடைய திருவருளாற்பிறந்தவர். வானிட்ட கீர்த்தி மகிழ் கூரத்தாழ்வான் மகிழ வந்த, தேனிட்ட தார் நம்பெருமாள் குமாரர்’ என்பர் திவ்வியகவி ஐயங்கார். எம்பாருடைய மாணாக்கர்; பராசரபட்டர் என்பது இவருடைய திருப்பெயர். செய்ந்நன்றியறிதலுக்கு அறிகுறியாக இராமாநுசர் இத்திருப்பெயரை இவருக்கு வைத்தனர். இப்பெரியாருக்குத் தேவியர் இருவர். இவர் தொல்காப்பியம் முதலான இலக்கணங்களையும், தொல்காப்பியங்களான இலக்கியங்களையும் கற்றுத்துறை போயவர். வியாக்கியானத்தில