|
இவ
இவருடைய நிர்வாஹங்கள்
மிகச்சிறப்புடையனவாயும் சுவை பயப்பனவாயும் இருக்கும். திருநெடுந்தாண்டகத்தில் ‘மைவண்ண நறுங்குஞ்சி’
என்ற பாசுரத்திற்கு இவர் அருளிச்செய்த வியாக்கியானம் தனிப்பெருஞ்சிறப்புடையது. இராமாநுசருடைய
நியமனத்தின்படியே சென்று, மேல் நாட்டிலிருந்து ‘வேதாந்தி’ என்பவரோடு ஒன்பது நாள் வாதஞ்செய்து,
அவரை வென்று திருத்திப் பணி கொண்டவர். ‘இவ்விபூதியும் இவ்விபூதிமான்களும் பாக்கியமற்றவர்கள்.
ஆனால், அடியேன் செய்வது என? நாயுடலுக்கு நறுநெய் தொங்குமோ? இன்னம் சிலநாள் இங்கே அடிமைகொண்டருளில்
பரமபதத்திற்கும் இதற்கும் சுருளும்படியுங் கட்டேனோ?’ என்று ராஜகுல மஹாத்மியத்தாலுண்டான
செருக்குத் தோன்ற உரைத்தவர்; ‘ஆசனபதமத்திலே பொருந்தியிட்ட திருவடித்தாமரைகளும், அஞ்சலென்ற
கையும், கவித்த முடியும், முறுவல் பூத்த சிவந்த திருமுகமண்டலமும், திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும்
பரமபதத்தில் கண்டிலேனாகில் மூலையடியே முரித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன்!’ என்று தம்
அன்பெல்லாம் தோன்ற திருவரங்கநாதனைப் பார்த்துக் கூறின ஏற்றம் வாய்ந்தவர். இவர்
அருளிச்செய்த நூல்கள் : அரங்கராஜஸ்தவம், ஸ்ரீ குணரத்நகோசம், ஸஹஸ்ரநாம்பாஷ்யம், கிரியா
தீபம், அஷ்டஸ்லோகி, சதுஸ்லோகி, துவிஸ்லோகி, தனிஸ்லோகி என்பன.
பராங்குசநம்பி
: இவர், எம்பாருடைய திருத்தம்பியாரான
சிறிய கோவிந்தப் பெருமாளுடைய புதல்வர். ‘பராங்குசநம்பி’ என்னும் நம்மாழ்வாருடைய இத்திருப்பெயரை
அவர் நினைவின் பொருட்டு, இராமாநுசர் இவருக்கு வைத்தனர். இவர் எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள்
ஒருவர்.
பிள்ளை திருநறையூர்
அரையர் : இவர், நஞ்சீயர் காலத்தவர்;
எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். (அவதாரிகை - திருமகள் கேள்வன் ஒன்று.
பக்.
14. வியாக.
பக். 191 காண்க.)
பிள்ளைப்பிள்ளையாழ்வான் :
இவர், கூரத்தாழ்வானுடைய
மாணாக்கர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். பிள்ளை என்றும் இவரை வழங்குவர்.
கூரத்தாழ்வார் திருநாட்டுக்கு எழுந்தருளும் போது, இவர் மடியிலே திருமுடியை வைத்துக்கொண்டு திருநாட்டுக்கு
எழுந்தருளினார் என்பர். ‘பிள்ளைப்பிள்ளையாழ்வான் மடியிலே திருமுடியையும் ஆண்டாள் மடியிலே திருவடிகளையும்
வைத்துக்கொண்டு, உடையவர் திருவடிகளைத் தியானித்துக்
|