|
New Page 1
கொண்டு அன்றே திருநாட்டுக்கு
எழுந்தருளினார்?’ என வருதல் காண்க.
பிள்ளையமுதனார்
: (வியாக்.
பக். 233 காண்க). இவர் திருவரங்கத்தமுதனார்
என்று கருதப்படுகின்றார் என்பர்.
பிள்ளையுறங்காவில்லி
தாசர் :
இவர் இராமாநுசருடைய மாணாக்கர்; சோழன் அவைக்களத்தில் அமர்ந்திருந்த வில்லிகள் மூவருள்
ஒருவர்; அரசனிடத்துத் தமக்குக் கிடைக்கும் பொருளனைத்தையும் இராமாநுசர் திருவடிகளிலே சமர்ப்பித்தவர்;
மடத்தில் அத்தாணிச்சேவகம் பெற்று வாழ்ந்தவர். இவர் தேவிகள் பொன்னாச்சியார். தேவிகளின்
பேரழகில் ஈடுபட்டுத்துவக்குண்டிருந்த இவர், இராமாநுசருடைய திருவருளால் பெரிய பெருமாளைச் சேவித்த
பின்னர், பிரபத்தி மார்க்கத்தை மேற்கொண்டவர். ஒரு நாள், உடையவர், ‘அபயப்பிரதானம்’
அருளிச்செய்யாநிற்க, அதனைக்கேட்டிருந்த இவர் எழுந்து வணங்கி நின்றனர்’ ‘பிள்ளாய்! இது என்?’
என்று உடையவர் கேட்டருள, ‘முற்றுந் துறந்து பெருமாள் திருவடிகளே தஞ்சம் என்று வந்து விழுந்த விபீஷணாழ்வானையும்
அகப்பட, ‘கொல்லுங்கள்’ என்று கல்லுந் தடியுங்கொண்ட இராமகோஷ்டிக்கு, அடியேன் பசு, பத்தினிகளோடு
கூடினவன் ஆளாகப் புகுகிறேனா?’ என்றார். உடையவரும் ‘கேளும் பிள்ளாய்! அஞ்சாதே கொள்ளும் : நான்
பெற்றேனாகில் நீர் பெறுகிறீர்; பெரிய நம்பி பெற்றாராகில் அடியேன் பெறுகிறேன்; ஆளவந்தார்
பெற்றாராகில் பெரியநம்பி பெறுகிறார்; மற்றுமுள்ளார் பெற்றார்களாகில் இவர்களும் பெறுகிறார்கள்;
நம் சடகோபர் ‘அவாவற்று வீடு பெற்றேன்’ என்று தம் திருவாக்காலே அருளிச் செய்கையாலே அவர்
பெற்றது சித்தம்; ஆனபின், நமக்கும் சித்தம் என்று இரும். கழுகு உண்ணில் வாழையும் உண்ணும் என்றிரும்.
ஆன பின்னர், நான் பெற்றேனாகில் நீர் பெறுகிறீர், அஞ்சாதே சுகமே இரும்,’ என்று அருளிச்செய்ய,
ஆறியிருந்த பெரியார் இவர். பெருமாள் செய்ய திருநாள் கண்டருளித் திருக்காவேரியில் தீர்த்தம்
பிரசாதிக்க எழுந்தருளுகிற போது எம்பெருமானார், முதலியாண்டான் திருக்கைத்தலம்பற்றி எழுந்தருளி
நீராடி, மீண்டு எழுந்தருளும்போது இவருடைய திருக்கைத்தலம் பற்றி எழுந்தருள, சேவித்திருந்த முதலிகள்
‘இதற்கு அடி என்?’ என்று விண்ணப்பஞ்செய்ய உடையவரும், ‘ஜன்மம் உயர்ந்திருக்கச்செய்தே தாழ
நில்லாநின்றோமே என்ற அபிமானம் உண்டே. அல்லாதார்க்கு, அக்கொத்தையும் இல்
|