|
ஆ
ஆசை கரை புரண்டபடியை
அருளிச்செய்தார், 1பெரிய திருவந்தாதியில்; 2ஆமத்தை அறுத்துப் பசியை
மிகுத்துச் சோறு இடுவாரைப் போன்று, தமக்கு ருசியைப் பிறப்பித்தபடியையும், அந்த ருசிதான்
பரபத்தி பரஞான பரம பத்திகளாய்க் கொண்டு பக்குவமானபடியையும், பின்னர்ச் சரீர சம்பந்தமும்
அற்றுப் பேற்றோடே தலைக்கட்டின படியையும் அருளிச்செய்கிறார், திருவாய்மொழியில்.
3தமையனாராகிய
ஸ்ரீ ராமபிரானுக்கு அவர் மனம் உவக்கும் அடிமைகளைச் செய்யவேண்டும் என்ற வேணவாவோடு வந்து சேர,
கைகேயி 4‘ராஜந்’ என்ற சொல் கேட்டு ஸ்ரீ பரதாழ்வான் பட்டபாடு போலே இருக்கிறது,
திருவிருத்தத்தில் நிலை; திருச்சித்திரகூட மலையிலே பெருமாள் எழுந்தருளியிருந்தார் என்று கேட்ட
ஸ்ரீ பரதாழ்வான், 5‘என் ஒருவன் கண்ணில் கண்ணநீர் பொறுக்கமாட்டாதவர் இத்தனை பேர்
ஆற்றாமை கண்டால் மீளாது ஒழிவரோ? எனக்கு விருப்பமான காரியங்களைத் தம் தலையாலே இரந்து செய்யக்கடவ
அவர், நான் என் தலையாலே இரந்த காரியத்தை மறுப்பரோ? நான் தம் பின் பிறந்தவன் அல்லனோ?
பின் பிறந்தவன் என்று கூறு
1.
‘ஆசை கரை புரண்டபடியை அருளிச்செய்தார்.’ என்பதனை,
‘அருகும்
சுவடும் தெரிவுணரோம் அன்பே
பெருகும் மிகஇதுஎன்
பேசீர் - பருகலாம்
பண்புடையீர்!
பாரளந்தீர்! பாவியேம்கண் காண்பரிய
நுண்புடையீர்!
நும்மை நுமக்கு’
(பெரிய திரு. 3)
என்ற திருப்பாசுரத்தால்
உணர்தல் தகும்.
2.
‘ஆமத்தை அறுத்தல்’ முதலிய மூன்றற்கும், ‘தமக்கு ருசியைப்
பிறப்பித்தபடியையும்’ என்பது முதலான
மூன்றையும் முறையே
பொருத்திக்கொள்க. ஆமம் - பசியின்மை. பரபத்தியாவது, இறைவனைக்
காணும்போது இன்பமும், காணாதொழியும்போது துன்பமும் அடைதல்;
பரஞானமாவது, இறைவனைத் தெளிவாக
நேரே அறிதல்; பரமபத்தியாவது,
இறைவனுடைய பிரிவில் சத்துக்குக் கேடு உண்டாதல். அதாவது, தான்
உளனாந் தன்மை இன்றியே ஒழிதல். ‘மயர்வுஅற மதிநலம் அருளினன்,’
‘அதனில் பெரியஎன் அவா அறச்
சூழ்ந்தாயே’ என்பன முதலான
திருப்பாசுரங்களைத் திருவுளத்தேகொண்டு, ‘தமக்கு ருசியைப் பிறப்பித்த
படியையும்’ என்பது முதலாக அருளிச்செய்கிறார்.
3. இப்பிரபந்தங்களை அருளிச்செய்யுங்காலத்தில் ஆழ்வாருக்கு இருந்த நிலை
வேறுபாடுகளை, ஸ்ரீ பரதாழ்வானுக்கு
இருந்த நிலை வேறுபாடுகளை
மேற்கோளாகக் காட்டி விளக்குகிறார், ‘தமையனாராகிய ஸ்ரீராம பிரானுக்கு’
என்றது முதல், ‘இவர்க்குத் திருவாய்மொழியில் பேறு’ என்றது முடிய.
4. ஸ்ரீராமா. அயோத்.
5. ஸ்ரீராமா. அயோத். 101 : 12.
|