பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
7

ஈடு முப்பத்தாறாயிரப்படியின் அவதாரிகை 1

மஹாப்பிரவேசம்2 - ‘திருமகள் கேள்வன் - ஒன்று’

3திருமகள் கேள்வனாய், அடையப்பட்ட எல்லா விருப்பத்தையுமுடையனாய், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும்

 

1. அவதாரிகை - முன்னுரை; அதாவது, தோற்றுவாய்.

2. பிரவேசம் - புகுதல். மஹாப்பிரவேசம் - பெரிய புகுவு. மஹத் என்பது   பெருமையை உணர்த்தும். இது, திருவாய்மொழியாகிய இந்நூலின்   உட்பொருளைக் கூறுதற்குப் புகுகின்ற புகுவு ஆதலின், ‘மஹாப்   பிரவேசம்’ என்கிறார். பின், திருப்பதிகந்தோறும் கூறும் முன்னுரையைப்   ‘பிரவேசம்’ என்பர். இது, ‘கருவமைந்த மாநகருக்கு உருவமைந்த வாயில்   மாடம் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும்   ஞாயிறும் போலவும், தகை மாண்ட நெடுஞ்சுவர்க்கு வகை மாண்ட ஓவியம்   போலவும்’ இருத்தலின், இந்நூலைக் கற்கப் புகுவோர் இவ்வவதாரிகையை   முன்னர்ப் படித்து உணர்தல் வேண்டும்.

3. முதலில், இறைவன் ஆழ்வாரை விசேஷ கடாக்ஷம் செய்தருளின படியை   அருளிச்செய்கிறார், ‘திருமகள் கேள்வனாய்’ என்று தொடங்கும் முதல்   வாக்கியத்தால். இவ்வாக்கியத்தால் இறைவனுடைய நிர்ஹேதுகமான   திருவருளால் ஆழ்வாருக்கு உண்டான திவ்விய ஞான ரூபத்தின் சிறப்புச்   சொல்லப்படுகின்றது. இத்தால் ஆப்த தமத்துவம் பெறப்படும். ஆப்த   தமத்துவமாவது, உண்மைப் பொருள்களை உள்ளவாறு உணர்ந்து   உணர்ந்தவாறே பிறர்க்கும் உரைக்குந் தன்மை. ஆப்தன் - நம்பத்தகுந்தவன்;   தமத்துவம் - உயர்வாம் தன்மை.

      நித்திய சமுசாரிகளான இவ்வான்மாக்கள் விக்ஷயத்தில் ஸ்வதந்தரனான   சர்வேஸ்வரனுடைய திருவருள் பிராட்டி புருஷகாரமின்றிக் கூடாமையாலே   ‘திருமகள் கேள்வனாய்’ என்றும், பிராட்டி புருஷகாரம் இருப்பினும்,   இவ்வான்மாக்கள் இடுகின்ற பொருள்களை விரும்பும் படியான குறையுள்ளவன்   (அபூர்ணன்) ஆயின், நீர்ஹேதுகமான திருவருள் கூடாது ஆகையாலே,   அதனை நீக்குவதற்கு ‘அடையப்பட்ட எல்லா விருப்பதையுமுடையவன்’   விரும்பப் படுகின்ற எல்லாப் பொருள்களும் குறைவற நிறைத்தவன் என்றபடி.   ‘இப்படி எல்லாப் பொருள்களும் நிறைந்தவனாயினும், ஆன்மாக்களின்   தோஷங்களைக் கண்டிருக்கச்செய்தே, பிராட்டியின் நிர்ப்பந்தத்திற்காகத்   திருவருள் புரிவானோ?’ என்னில், அங்ஙனமன்று; தோஷங்களையே   போக்கியமாகக் கொள்ளுவதற்குரிய வாத்சல்யம் முதலிய   குணங்களையுடையவன் என்பார், ‘மங்களம் பொருந்திய எல்லா   நற்குணங்களையும் உருவமாகவுடையவன்’ என்றும்,