ஸ்ரீ
இரண்டாம் பத்து
முதல் திருவாய்மொழி
- ‘வாயுந்திரை’
முன்னுரை
ஈடு :
‘ஒருவன் பெறுதற்குரிய பேறுகளுள்
மிக உயர்ந்த பேறு இறைவனுக்குச் செய்யப்படும் தொண்டேயாம்,’ என்று அறுதி யிட்டார் முதற்பத்தால்;
அவ்வாறு செய்யப்படுந்தொண்டிற்குத் தடைகளாகவுள்ள களைகள் அறுக்கிறார் இந்த இரண்டாம் பத்தால்.
மேல்1
திருவாய்மொழியில் 2‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று
இறைவனுடைய எளிமையினையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச்செய்தார். மேல் விழப் பண்ணுகைக்கு
இம்மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம். இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம்மூன்று குணங்களும்
நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின், அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே? ஆதலால், ‘அவனை இப்பொழுதே
அணைதல் வேண்டும்,’ என்னும் அவாமிக்கு எழுந்தது; நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே
பிறந்த பெருந்துன்பத்தை எம்பெருமானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடு
____________________________________________________________
1. நூறு பாசுரங்கள் கொண்டதொரு
தொகையைப் ‘பத்து’ என்றும், பத்துப் பாசுரங்கள்
கொண்ட பதிகத்தைத் ‘திருவாய்மொழி’
என்றும் வழங்குவர்.
2. திருவாய். 1.10.11
‘மணியை’ என்றதனால் எளிமையினையும் ‘வானவர் கண்ணனை’
என்றதனால் மேன்மையினையும், ‘தன்னதோர்
அணியை’ என்றதனால், வடிவழகினையும்
திருவுள்ளம் பற்றி ‘மணியை’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
|