Primary tabs
தமிழ் நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டவருமாகிய ஸ்ரீமத். உ. வே. வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரிய ஸ்வாமிகள் இவ்வுரையின் கையெழுத்துப் பிரிதியை முழுவதும் படித்து ஆங்காங்கு வேண்டிய இன்றியமையாத திருத்தங்களைச் செய்து உதவினார்கள். அடியேனுடைய நலனையே நாடுபவரும், இழுக்கலுடையுழி ஊற்றுக்கோல் போன்றவருமாகிய பல்கலைக்குரிசில் ஸ்ரீமான். வித்துவான். வே. வேங்கடராஜூலு ரெட்டியார் அவர்கள் இவ்வுரை அச்சாகும் போது அன்புடன் ஒரு முறை நோக்கி உதவினார்கள். இப்பெரியார்கலை எழுமை எழுபிறப்பும் உள்ளுதலன்றி, இவர்கட்கு அடியேன் செய்யும் கைம்மாறு யாதுளது? தலையல்லால் கைம்மாறு இல்லேன்.
இந்நூலைச் சென்னைப் பல்கலைக்கழகத்தார் அச்சிடுதற்குக் காரணராயிருந்த சொல்லின் செல்வர் தமிழ்ப்பேராசிரியர் உயர்திரு. ”ரா. பி. சேதுப்பிள்ளை, B.A., B.L, அவர்கட்கும், தொடர்ச்சியாக வெளியிட்டு உதவி வரும் சென்னைச் சர்வகலாசாலை அதிகாரிகட்கும் அடியேன் என்றென்றும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.
கற்றறிந்த மாந்தர் கடன்.’
07-19-1957
பு. ரா. புருஷோத்தம நாயடு