என
266 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
என்னை 1என்
கையில் காட்டித் தாராதொழிய வேண்டும்’ என்கிறார்.
(10)
211
விடலில் சக்கரத்து
அண்ணலை மேவல்
விடலில் வண்குரு
கூர்ச்சட கோபன்சொல்
கெடலில் ஆயிரத்
துள்இவை பத்தும்
கெடலில்
வீடுசெய் யும்கிளர் வார்க்கே.
பொ - ரை :
‘நீக்குதல் இல்லாத சக்கரத்தையுடைய பெருமையிற் சிறந்த இறைவனைப் பொருந்தி விடுதல் இல்லாத
வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் சொல்லப்பட்ட கெடுதல் இல்லாத
ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களையும் முயற்சியோடு கற்கின்றவர்கட்கு இவையே
அழிதல் இல்லாத மோக்ஷ உலகத்தைக் கொடுக்கும்’ என்றபடி.
ஈடு :
முடிவில், 2‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர் இதிற்சொன்ன பேற்றினைப் பெறுவர்,‘
என்கிறார்.
3‘நாம்
விடுகிறோம்’ என்று ஐயம் கொள்வது என்? நாம் ஒருவரையும் விடோங்காணும்’ என்று கையில் திருவாழியைக்
காட்டினான்; ‘விடல் இல் சக்கரத்து அண்ணலை’ என்கிறார். அதாவது, ‘ஒருநாளும் விடாத திருவாழியைக்
கையிலேயுடைய சர்வேஸ்வரனை’ என்கிறார். மேவல் விடல் இல் வண்குருகூர்ச் சடகோபன் சொல் -
அவன் தன்மையாலே கிட்டி அவனைப் பிரியில் தரியாதபடி பரம உதாரரான ஆழ்வார் அருளிச்செய்த.
வண்மையாவது, இவ்வனுபவத்துக்குப் பாசுரமிட்டு உபகரித்த உபகாரம். கெடல் இல் ஆயிரத்துள் இவை
பத்தும் - இவ்வாத்துமாவுக்குக் கேட்டின் வாசனையும் வாராதபடி நன்மையை ஆராய்ந்து அருளிச்செய்த
ஆயிரத்துள் இப்பத்தும். 4கிளர்வார்க்குக் கெடல் இல் வீடு செய்யும் - ‘வரில்
_____________________________________________________________
1. ‘என் கையில் காட்டித்
தாராது’ என்றது, ‘உபாயாந்தரங்களை அனுஷ்டித்து வாரும்’ என்று
கூறாது’ என்றபடி.
2. ‘கிளர்வார்க்குக் கெடலில்
வீடு செய்யும்’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
‘இதிற்சொன்ன பேற்றினை’ என்றது, ‘தனக்கேயாக எனைக்கொள்ளு
மீதே’ என்ற பேற்றினை.
3. ‘வேறே போக எஞ்ஞான்றும்
விடல்’ என்ன பின்னர், ‘விடலில் சக்கரத் தண்ணலை’
என்று பிரயோகிக்கின்றவருடைய
மனோபாவத்தை நாம் விடோம்’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். அதாவது ‘திருவாழியை விடிலன்றோ
உம்மை விடலாவது?’ என்றபடி.
4. ‘கிளர்வார்க்கு’ என்றதனால்;
‘வரில் போகடேன்; கெடில் தேடேன்’ என்றிருக்கை அன்றி
நம்பிக்கையுடையவர்க்கு’
என்று அருளிச்செய்கிறார்.
|