New Page 1
ஒன்பதாந்திருவாய்மொழி
- பா. 11 |
267 |
போகடேன், கெடில் தேடேன்’
என்று இருக்கை அன்றி, நம்பிக்கையுடையவர்க்குக் கேட்டின் வாசனையும் இல்லாததாய் அகங்கார மமகாரங்களை
உடைத்து அன்றிக்கே, ‘தனக்கேயாக வேணும்’ இவர் பிரார்த்தித்தபடியே இவ்வாத்துமாவினுடைய சொரூபத்திற்குத்
தகுதியான பேற்றினைச் செய்து கொடுக்கும்.
(11)
முதற்பாட்டில்,
உடல் சம்பந்தமான பேற்றினை விரும்பினார்; இரண்டாம்பாட்டில், மனத்தின் சம்பந்தமான பேற்றினை
விரும்பினார்; மூன்றாம் பாட்டில், வாசிகமான பேற்றினை விரும்பினார்; நான்காம் பாட்டில்,
சொரூபத்திற்குத் தகுதியான பேற்றினை அறுதியிட்டார்; ஐந்தாம்பாட்டில், ‘நீர் யாராய் இப்பேற்றினை
விரும்பினீர்?’ என்ன, ‘நான் யாராயினுமாக; உன்னை அனுபவித்து மகிழும்படி செய்தருளவேண்டும்’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘முக்கரணங்களாலும் உன்னைப் பிரீதி முன்னாக அனுபவிக்கச் செய்தருள வேண்டும்’
என்றார்; ஏழாம் பாட்டில், அப்படிச் சடக்கெனச் செய்யாமையாலே இன்னாதானார்; எட்டாம் பாட்டில்,
‘சொரூபத்திற்குத் தகுதியாக நீ கணநேரம் என்னோடே அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலமெல்லாம்
வேண்டேன்’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி
நானே கேட்டினைச் சூழ்த்துக்கொண்டேன்' என்றார்; பத்தாம் பாட்டில், ‘ஞான விசேடத்தைப் பண்ணித்
தந்தோம் அன்றே?’ என்று, என்னை ஒருநாளும் என்கையில் காட்டித் தாராதொழிய வேண்டும் என்றார்;
முடிவில், இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
எம்மாவீ டும்வேண்டா
என்றனக்குஉன் தாளிணையே
அம்மா அமையுமென
ஆய்ந்துரைத்த - நம்முடைய
வாழ்முதலாம் மாறன்
மலர்த்தா ளிணைசூடிக்
கீழ்மைஅற்று நெஞ்சே!
கிளர்.
(19)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|