ப
பிற்சேர்க்கை - IV
வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள்
துக்கத்தையுடையவர்கள்
தங்களோடு ஒத்த துக்கத்தையுடையவர்களைக் கழுத்தைக்
கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு ஆற்றாமைக்குப்
போக்குவிட்டுத் தரிக்குமாறு போன்று. ப.
3.
ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு
கிடந்து கூப்பிட்டாற் போன்று. ப.
4.
பகவானைத் தியானிப்பவர்கள் சலியாமல் இருப்பது போன்று. ப.
5.
அலைகடல் நீர் குழம்ப அகடாட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை மறவா திருப்பாரைப் போன்று.
ப.
5.
கிராமணிகள் பிறர்க்குத்
துன்பம் செய்துகொண்டே யாகங்களும் பண்ணிப் பவித்திரங்களும் முடிந்திட்டுத் தார்மிகர் என்னும்
படி திரிவது போன்று. ப.
6.
‘எங்கள் ஐயர் கவலைக்கடலில்
மூழ்கினவர் ஆனார்’ என்று பிராட்டி கூறியது போன்று. ப.
7.
‘இலங்கையை அழித்து என்னை
அழைத்துச் செல்லின் செல்லும் அச்செயல் அவ்விராமனுக்கு ஒத்ததாக இருக்கும்,’ என்று கூறி இருந்த
பிராட்டியைப் போன்று. ப.
7.
புழுகிலே தோய்த்தெடுத்தாற்போன்று.
ப.
9.
சிறையுறவு போன்று. ப.
11.
அவன் அவர்களுக்குக் கூட்டு இல்லாதாப்போலே. ப.
12.
மடல் ஊருவாரைப் போன்று.
ப.
14.
சன்னி சுரம் வந்தவர்களைப்
போன்று. ப.
14.
திருப்பாற்கடலோடு திருமலையோடு பரமபதத்தோடு
வாசியறத் தேடுவாரைப் போன்று. ப.
14.
இராம இலக்குமணர்கள் பிராட்டியைத் தேடித் திரிந்தது
போன்று. ப.
15.
|